கிரான் சந்தைக் கட்டடத் தொகுதியில் உள்ள மின்சாரக் கம்பத்தில் இங்கு முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை என்ற பதாகை பொருத்தப்பட்டிருந்தது. இந்தப் பதாகையே முறுகல் நிலை தோன்றக் காரணமாய் அமைந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே இப்பகுதியில் கலகம் அடக்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஏற்கனவே வாழைச்சேனையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பில் இரண்டு இனங்களுக்குமிடையில் முறுகல் தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.