வன்னி மண் பெற்றெடுத்த வீரத்திருமகன்
தலைவன் வழி நடந்த கொள்கைச் சீலன்
களத்தில் எதிரி நடுங்கும் இடிமுழக்கம்
தியாகத் தீயாய் ஒளிர்ந்திட்ட தீபன்.
வரலாற்றுச் சாதனை படைத்த தளபதி
தளராத துணிவு கொண்ட போர்மறவன்
ஆனந்தபுரத்து சமரின் பெரும் சாட்சி
ஈழத்தாயின் மடியில் உறங்கும் வீரன்.
ஜெயசிக்குறு தடுத்த வேங்கை இவன்
அஞ்சாத நெஞ்சுரம் கொண்ட சிங்கம்
விடுதலைப் போரில் தடம் பதித்தவன்
தமிழர் நெஞ்சில் வாழும் மாவீரன்.
கடலென எழுந்த எதிரிப் படையை
கட்டுப்பாட்டுடன் வீழ்த்திய பேராற்றல்
திட்டமிடலில் சிறந்த மதிநுட்பச் செல்வன்
போர்க்களம் கண்ட வியூகம் இவன்.
முல்லை மண்ணில் முளைத்த வீரம்
முன்னின்று வழிநடத்திய படைத் தளபதி
உயிரைத் துச்சமென மதித்த ஈகம்
உரிமைப் போரின் உன்னதத் தியாகம்.
எதிரியின் வியூகங்களை உடைத்தெறிந்தான்
எந்நேரமும் களமுனையில் நின்றிருந்தான்
தாய்மண் காக்க உடல் கொடுத்தான்
தமிழீழ வரலாற்றில் புகழாய் நிலைத்தான்.
மக்களின் துயர் துடைக்கப் புறப்பட்டான்
மாபெரும் போர்களில் வெற்றி குவித்தான்
தலைவனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானான்
தன்னிகரில்லா தளபதியாய் உயர்ந்தான்.
ஆயுதம் தாங்கி அறப்போர் புரிந்தான்
அடிமை விலங்கு உடைக்கத் துணிந்தான்
இறுதி வரை களத்தில் உறுதி காத்தான்
மாவீரர் வரிசையில் இடம்பிடித்து நின்றான்.
சிங்களப் படைகளைச் சிதறடித்த வேகம்
சிரித்த முகத்துடன் போரிட்ட விவேகம்
விடுதலைக் கனவைச் சுமந்த கண்கள்
வீரத்தின் அடையாளமாய் இன்றும் மின்னும்.
கார்த்திகைப் பூக்களால் தூவுகிறோம் வணக்கம்
களப்பலி கொடுத்த உந்தன் ஈகம் பெரிது
தேசம் போற்றும் பிரிகேடியர் தீபன் நீ
திசையெங்கும் ஒலிக்கும் உந்தன் புகழ்.
#நிலவன்
ஊடகவியலாளர் &
உளவளத்துணையாளர் (Counsellor)
விடுதலைப் பெருமூச்சு : பிரிகேடியர் தீபன்




















































