மே மாதம் பதினைந்தில் காற்றில் ஏறி — அன்று
மேதினியைக் குலுக்கியது யோகியின் உரை!
சமராய்வு மையத்தின் பொறுப்பாளன் குரலில் — தமிழ்
சமரசமின்றி முழங்கியது கொள்கை வரி!
“அடிபணிவு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று
அடுத்தடுத்த நாட்களிலும் சூசை சொன்னான்!
முடிவுரை எழுதத் துடித்த உலகத்தின் முன்னே — தன்
முடிவினைத் தெளிவாகத் தலைவர் தந்தான்!
“தொகுதியாகப் போராளிகள் புடைசூழ அங்கே,
எங்கள் தலைவர் நந்திக்கடல் களத்தில் நிற்பார்!
உலகிற்குச் சொல்ல வேண்டிய செய்தியை அவர்
உரிய நேரத்தில் உரக்கச் சொல்வார்!”
புலித்தேவன் சொன்ன அந்த இறுதி வார்த்தை — என்றும்
புரட்சி வரலாற்றின் அழியாத ஏடு!
நடேசன் மறுத்த அந்தச் சரணடைவுச் சொல் — தமிழன்
நரம்புகளில் ஏற்றியது மானப் பாடு!
“எங்களைச் செயலிழக்கச் செய்வதே உலகத் திட்டம்;
அதன் பின்னே எமக்கில்லை நல்வாழ்வு.
புலிகள் பலமாக இருக்கும் நிலை ஒன்றே
புதிய விடியலைத் தரும் தமிழர்க்கு விடிவு!”
“தலைவரை அழித்துவிட்டால் போராட்டத்தை
தகர்த்துவிடலாம் என உலகம் எண்ணும்.
அது நடக்காது என்பதே இன்றைய வெளிச்சம்;
எங்கள் அடிச்சுவடு இறுதிவரை போரிட்டே வெல்லும்!”
“புலம்பெயர் உறவுகளும் தமிழ்நாட்டுத் தோழரும்
எங்கள் பின்னே அரணாகத் துணையாய் நிற்பார்.
உலக மக்களின் மனசாட்சியோடு அவர்கள்
உரிமைக் குரலெடுத்து என்றும் பேசுவார்!”
“அரசுகளின் எண்ணங்களை மாற்றும் வரைக்கும்
இந்த அலைகடல் ஓயாது தொடர்ந்து ஒலிக்கும்.
நம்பிக்கை இழக்காத மக்கள் போராட்டங்கள்
தோற்றதாகச் சரித்திரத்தில் எங்கும் இல்லை!”
“அடக்குமுறைப் பேய்களுக்கு அடிபணிந்து வாழோம்;
அஞ்சாமல் இறுதிவரை போராடி நிற்போம்.
மடக்குவார் எவருமில்லை மாவீரர் ஓர்மத்தை;
மண்ணில் சரணடைய மாட்டோம்!” என உரைப்போம்.
கோட்பாடாய் மாறியது யோகியின் அந்த உரை — இன்று
கோடித் தமிழரின் நெஞ்சில் சுடராய் எரிகிறது.
நாட்படச் சரித்திரமாய் நந்திக்கடல் தத்துவம் — என்றும்
நாளைய விடியலின் பொறியாக விளங்குகிறது.
#நிலவன்
ஊடகவியலாளர் &
உளவளத்துணையாளர் (Counsellor)
நந்திக்கடல்: பணியாத பேரொலி
Screenshot
See less





















































