வரலாறு என்பது வெறும் கடந்து போன நாட்குறிப்பு அல்ல; அது நம் மக்களின் கண்ணீராலும் குருதியாலும் எழுதப்பட்ட உண்மைகள்.
எதிர்வரும் மே 18, முள்ளிவாய்க்கால் தமிழினப் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, நம் மக்களின் போராட்டத்தையும் வாழ்வியலையும் ஆவணப்படுத்தும் வகையில் #நிஜத்தடன் #நிலவன் எழுதியுள்ள இரு இலக்கியப் படைப்புகளை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் #செந்தமிழன் #சீமான் அவர்கள் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வைக்கவுள்ளார்.
வெளியாகவிருக்கும் நூல்கள்:
1. மௌனத்தின் மௌனம் (The Silence of Silence)
போர்க்களத்தில் நிலங்களையும், உறவுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து தவித்த நம் மக்களின் உண்மைச் சம்பவங்களையும், நெஞ்சை உலுக்கும் துயரங்களையும் விவரிக்கும் 27 சிறுகதைகளின் தொகுப்பு.
2. யுத்த வடுக்கள் (The Scars of War)
நாம் சுமந்து நிற்கும் இனப்படுகொலையின் வரலாற்றை, அடுத்த தலைமுறைக்கும் உலக சமூகத்திற்கும் கடத்தும் சாட்சியமாக விளங்கும் 150 சக்திவாய்ந்த கவிதைகளின் தொகுப்பு.
நம் மக்களின் வலிகளையும், போராட்டங்களையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் இந்த வரலாற்று ஆவணங்களின் வெளியீட்டு விழாவிற்குத் தமிழின உணர்வாளர்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாள்: 18-05-2026 (திங்கட்கிழமை)
நேரம்: மாலை சரியாக 04:00 மணிக்கு
இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல், தேசிய நெடுஞ்சாலை.சென்னை.
வாருங்கள்! நம் வரலாற்றை மீட்டெடுப்போம்!
வரலாற்று ஆவணங்களின் வெளியீட்டு





















































