விடுதலைப்புலிகள் தாங்கள் கொண்ட கொள்கையில் இறுக்கமான பற்றுறுதி கொண்டவர்கள்.புனர்வாழ்வு பெற்ற 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் சமூகத்தில் இணைக்கப்பட்டிருக்கினறார்கள்.2009 போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட பல போராளிகள் பார்வைக் குறைபாடுஇ உடல் நடுக்கம்இ புற்றுநோய் என்று பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு பேச்சு எழுந்தது. விடுதலையான போராளிகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணம் அடைவது ஏனையோர் மத்தியில் அச்சத்தையும் சந்தேகத்தையும் கிளப்ப இந்த விவகாரம் பொதுவெளிக்கு வந்தது.
இராணுவத்தினரிடம் சரணடைந்த அல்லது படையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஊசி மருந்து 2009ம் ஆண்டு முதல் சமூகத்திலும், போராளிகள் மத்தியிலும் பதட்டமும், பாதுகாப்பு அச்சதம் தொடர்பான நம்பிக்கையற்ற ஒரு நிலைமையினை ஏற்படுத்தியிருக்கின்றது.
இராணுவ புலனாய்வு பிரிவினரால் இறுக்கமான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் .சித்திரவதை சார்ந்த நடவடிக்கைகளுக்கும் ஆளாகியிருக்கின்றார்கள் உளவியல் பாதிப்புக்கும் உள நெருக்கீடு மிக்க உடல் உபாதைகள் கொண்ட நடைமுறைக்கும். இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்புக்கள் மிக மோசமான மன உளைச்சலுக்கும் அச்ச உணர்வுக்கும், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற ஒரு நிலையில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள்.
தடுப்பு முகாம்களில் தமக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா இராணுவத்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும்,எஸ்.என்.தேவன் என்ற முன்னாள் பேராளி ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
போர்க்குற்ற விசாரணைக் கட்டமைப்பு மற்றும் பொது மக்களது கருத்துக்களை அறியும் முத்தெட்டுவேகம தலைமையிலான செயலணியில் முன்னிலையாகிய போதே இராணுவத்தினர் மீது பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய குறித்த குழுவினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள். புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேரில் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இதன்போதே புனர்வாழ்வு முகாமில் வைத்து விச ஊசிகள் ஏற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து எஸ்.என்.தேவன் என்ற முன்னாள் போராளி ஒருவர் முக்கியமான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமக்கு அவயவங்களை செயலிழக்கச் செய்யும் இராசயனம் கலந்த உணவு வழங்கப்பட்டதாக தான் நம்புவதாக குறித்த முன்னாள் போராளி சந்தேகம் வெளியிட்டார்.
103 முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி, முதலில் வெளிப்படுத்திய பெண்ணிற்கு சிறிலங்கா புலனாய்வு துறையால் அச்சுறுத்தல்
இராணுவத்தினரால் நூற்றி மூன்று முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்ட தகவலை முதன்முதலில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய பெண்மணிக்கு புலனாய்வு தரப்பால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும். இதனால் தான் வேறு இடத்தில் தற்போது தங்கியிருப்பதாகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பெண் தெரிவித்துள்ளார்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டார் தினமான நேற்றைய தினம் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு கோரியும், இலங்கை மீது சர்வதேச விசாரணையே வேண்டும் எனவும் வலியுறுத்தியும் நேற்றைய தினம் யாழில் கண்டனபேரணி ஒன்று இடம்பெற்றது. சட்டத்திற்கும் மனிதவுரிமைகள் கற்கை நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் நூற்றுக்கணக்கான காணமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போதே குறித்த பெண்மணியினால் வலம்புரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாதங்களுக்கு முன்னர் நல்லூரில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஒன்றில் குறித்த பெண்மணி நூற்று மூன்று முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்ட தகவலை ஊடகங்கள் முன்னிலையில் வெளிப்படுத்தி இருந்தார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும் பெரும்பாலான போராளிகள் புற்று நோயினால் தொடர்ச்சியாக இருந்து வருகின்றனர். இந்த இறப்பிற்கு காரணம் இராணுவத்தினரால் ஏற்ர்பாட்ட விச ஊசியே இவ்வாறான மரணங்களுக்கு சர்வதேச விசாரணை அவசியம் என அந்த பெண் அப்போது வலியுறுத்தி இருந்தார்.
புனர்வாழ்வு பெற்ற 107 போராளிகள் இது வரையில் மரணமடைந்துள்ளனர். மரணத்திற்கான காரணங்களும் கண்டறியப்பட முடியவில்லை. நோயினால் மரணமடைவதாக சாதரணமாக மரண சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இது குறித்து இலங்கையில்பணிபுரியும் சில வைத்தியர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது ‘ சீனாவில் தயாரிக்கப்பட்ட விஷ ஊசிகளை பரீட்சித்து பார்ப்பதற்காக தடுப்பூசி என்ற போர்வையில் முன்னாள் போராளிகளுக்கு இலங்கை அரசு செலுத்தியுள்ளது’ என்ற அதிர்சிகரமான தகவலை தங்களது பெயர்களை வெளியிட வேண்டாம் என்ற உத்தரவாதத்துடன் தெரிவித்தனர்.
அதே நேரம், யுத்தத்தின் பின்னரான புனர்வாழ்வின்போது தமக்கு இரசாயனம் கலந்த உணவுகள் வழங்கப்பட்டதோடு சந்தேகத்திற்கிடமான ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டதாக முன்னாள் போராளி ஒருவர் சாட்சியமளித்துள்ளார். இதனால் தம்மால் சுறுசுறுப்பாக பணியாற்றமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கின் நான்கு மாவட்டங்களில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நடைபெற்றிருந்தன. அவற்றில் பங்கேற்று மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் ஒட்டிசுட்டானில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் அமர்வில் பங்கேற்ற முன்னாள் போராளி ஒருவரே இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் – இறுதிப்போரின்போது பலர் சரணடைந்திருந்தனர். இது தொடர்பாக பல செய்திகள் உள்ளன. ஆனால் மக்கள் இவ்விடையம் தொடர்பாக கதைக்கப் பயப்படுகின்றார்கள். இதைக் கதைக்கப்போனால் எமக்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை. தாம் ஒருவரையும் கொல்லவில்லை என்கிறார்கள் அவ்வாறாயின் அங்கு சென்றவர்கள் எல்லாம் நஞ்சு அருந்தியா இறந்தார்கள்.
கோழியைப் பிடித்து சாப்பிட்டவனிடம் எங்கள் கோழியைக் கண்டீரோ என எவ்வாறு கேட்க முடியும். அவன் எங்களிற்கு நீதியைத் தரப்போவதில்லை. எங்கள் தமிழ் அரசியல கட்சிகள் கூட பெல்டி அடிச்சுக்கொண்டு இருக்கிறாங்கள். கண்டிப்பா சர்வதேசத்தில் இருந்து நடுநிலமையான நாடுகள் தான் எமக்கு நீதியை வழங்கவேண்டும். கிரேசிமா நாகசாயி வரலாற்றை எடுத்துக்கொண்டா் கூட கண்டிப்பா இன்றைக்கும் அமெரிக்காவிற்கு இழுக்குத்தான்.
எங்கண்ட விரலை வெட்டிப்போட்டு தம்பி தெரியாம வெட்டீட்டன் நான் அம்பு வில்லு தாறன் உன்னை பாதுகாக்க என கூறுவது போலத்தான் அரசின் செயற்பாடுகள் இருக்கின்றன. விடுதலைப் புலிகள் இவ்வாறான வேலையைச் செய்யவில்லை. யுத்த தர்மம் என்று ஒன்று உள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்க இராணுவத்திற்கு யுத்த தர்மத்தைப் பற்றி கடைசிவரை போதிக்க வேண்டும். சரணடையப்போறவங்களைச் சுடுவது நியாமமில்லை. ஏனெனில் அவர்கள் நிராயுதபாணிகள்.
நான் ஒரு முனைநாள் போராளி. தடுப்பால வந்த பிறகு நாங்கள் யுத்தங்களை விட்டு ஒதுங்கி இருக்கிறம். சொன்னாலும் சொல்லாட்டாலும் உவங்கள் எங்களிற்கு இரசாயண உணவுகளைத் தந்திருக்கிறாங்கள் என்பது எங்களிற்கு விளங்குகின்றது. நான் முன்பு 100 கிலோ தூக்கி எத்தினயோ கிலோமீற்றர் ஓடுற எனக்கு ஒரு பொருளைக்கூட தூக்க முடியவில்லை. கண் பார்வை குறைகின்றது. எங்களிற்கு ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் விழங்குகின்றது.
ஏன் தடுப்பு மருந்து முழுப்பேருக்கும் ஏற்றினவங்கள். ஊசியைக் கொண்டுவந்து போடுவாங்கள். என்ன தடுப்பிற்காக ஏற்றினார்கள் என்று எமக்குத் தெரியாது. ஊசி ஏற்றிய அன்று மாலையே ஒரு போராளி இறந்துவிட்டார். அங்கு என்ன என்ன நடந்தது என்று எங்களிற்கு மட்டும்தான் தெரியும். நாங்கள் தலைவரின் உப்பைச் சாப்பிட்டு வளர்ந்தவர்கள். கருணா மாறினாலும் நாங்கள் மாறவில்லை. நாங்கள் உணர்வோடு தான் இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.