இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் மரணித்த 500 பொது மக்களின் நினைவாக நினைவுக்கல் நடப்படவுள்ளது.
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இந்த நினைவுக் கல்லினை அமைப்பதற்கான வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
யுத்தத்தில் அகப்பட்டு மரணித்த பொதுமக்களின் நினைவாக குறித்த ஆலயத்தின் காணியில் நினைவுக்கல் அமைக்கப்படவுள்ளது.
மேலும் இதன் முதல்கட்டமாக 500 பொதுமக்களின் நினைவாக நினைவுக் கற்களில் பெயர் பொறிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
























































