தீயாய் எரியும் நினைவுகள் கொண்டு..!!
வீரியக் கனவுகளில் ஒரு
நேரியக் கவிதை வடிப்பேன்….!!
போரியல் தர்மம் நின்று
போர்க்களம் பலவும் வென்று…!!
தோளிடை புயங்கலெல்லாம்
தூண்போல்வலிமை
கண்டு….!!
தோற்காத எங்கள் புலிப் படை வீரம் என்று!!
காலமும் சொல்லுவேன்!!
களம் கண்டதை என் பேனாமுனை கொள்வேன்!!
மறம் நின்ற மாவீரனவன்
மனத்தில் உரம் மிகுதி ஆனவன்!!
எளிதில் எதிரி வசமாகதவன்!!
எங்கள் தீலிபண்ணா என்பவன்!!
அகிம்சை வழி சமைக்கும் என்று…!!
அயலகமண்ணின் சதி மறந்து….!!
ஆறம்சக் கோரிக்கை
அறவழி நல்குமென்று…!!
ஈடில்லா உன் இன்னுயிரை…!!
ஈழமண்ணில் ஈகை செய்தாய்…!!
பாவிகள் நிறைந்த பாழ்பட்ட பூமியில்..!!.
வேள்வித் தீ வளர்த்த – உன்
தியாகத்தை எண்ணி வெடிக்கிறது நெஞ்சம்…!!
மேவி ஒரு புரட்சி செய்வோம்…!!
விடுதலைக் கனவுகள் காப்போம்…!!
யாழிசையும் பேரிகையும் முழக்க
மேதகு மேல் சத்தியம் கொண்டு சரித்திரம்
பிறக்கும்…!!
அதை நாளை சந்ததியும் காக்கும்…!!
சத்தியம் அண்ணா!!
நித்தியம் காக்கும் பூமி இது அண்ணா!!
நித்தமும் உங்கள் நினைவுகள் நெஞ்சில்
வாழும் அண்ணா!!
வரிகள்:- வன்னியூர் கலா பார(🔥)தீ