ஆரோக்கியமான போட்டிகளை வரவேற்க ஈழ சினிமாவும் தயாராக வேண்டும். மெதுவாக மலரும் பூவை போல சத்தமில்லாமல் ஈழ சினிமாவின் வளர்ச்சி கண்முன்னே புலர்கின்றது.
ஈழத்து சினிமாவில் காலூன்ற விழையும் கலைஞர்களின் அர்பணிப்பில் நெகிழ்ந்து போகின்றது மனது. இருக்கும் வசதிகளை கொண்டு இன்னல்களை சவாலாக்கி இமயத்தை தொட நினைக்கும் கலைஞர்களின் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கிப் போகின்றது துன்பத்தின் கோடுகள்.
ஆயிரம் கனவுகளை சுமந்து ஈழத்து சினிமாவில் காலடி பாதிக்க துடிக்கும் கலைஞர்களின் அர்பணிப்பில் புவிகரனின் இயக்கத்திலும் எழுத்திலும் உருவான மாஸ் காதல் மாத்திரையே ”லத்தி”
இந்த படத்திற்கான கதையை லதீப் பாலசுப்ரமணியம் வழங்கி படத்திற்கான பாடலையும் அழகாக எழுதியிருக்கின்றார். இந்த படமானது ”மாஸ் நாயகன்” கஜனின் கலக்கலில் ”கண்ணழகி” அனுவின் மனதை தொடும் நடிப்பில் நெஞ்சை தொடும் தூள் திரைப்படமாக வெளிவருகின்றது என்று திடமாக கூற முடியும்.
படத்தொகுப்பை ஹர்ஷி லாவகமாக கையாள தாளம் தப்பாமல் அழகிய பின்னணி இசையை அள்ளி வழங்கியிருக்கின்றார் ராஜா.கண்ணுக்கு குளிர்மையும் கால்களில் வேகத்தையும் தரக்கூடியதாக அமைக்கப்பட்ட காட்சியமைப்பும் அழகுக்கு அழகாக்கி செல்கின்றது.
நடிப்பில் திருப்புமுனை பார்த்திபனின் உதயம் படம் பார்க்க தூண்டும் என்றே நம்புகின்றோம்..
இணை இயக்கம் _ விமல்
பாடியவர் _கேதீஸ்வரி
துணை நடிகர்கள் :ஹௌதமி,நிதர்சன், கபிலி ,சர்வேஸ்வரன், பிரசாத்,கவிஸ், சரணி,விமலன், கிருஷ்ணா,குகன், நியூட்டன்,றெஜினோட்
வாழ்த்துக்கள் லத்தி குழு
ஒரு சிறு வேண்டுகோள் படக்குழுவினருக்கு
இனிவரும் காலங்களில் படத்திற்கான பெயரை தேர்ந்து எடுக்கும் போது கவனமாக செயற்படுங்கள். ஈழத்து கலைஞர்களுக்கு என்று ஒரு தனித்துவத்தை பேணுவது கலைஞர்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும்
உயிர்ப்பூ செய்திக்காக
-அக்கினி