இந்த பதிவில் “ஆறுமுக நாவலர் பற்றிய கட்டுரை தமிழில்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவை நோக்கலாம்.
இவரால் எழுதப்பட்ட அல்லது பதிப்பு செய்யப்பட்ட நூல்களாக இன்று வரை நூற்றுக்கும் அதிகமான நூல்கள் அறியப்பட்டுள்ளன.
ஆறுமுக நாவலர் பற்றிய கட்டுரை தமிழில்
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வாழ்க்கை
- கல்வி
- பணிகள்
- நூல்கள்
- முடிவுரை
முன்னுரை
தமிழ் மற்றும் சைவம் என்பன வளர தமது வாழ்நாளை அர்ப்பணித்த ஈழத்துப் பெரியார்களில் மிகவும் முக்கியமானவர் ஆறுமுக நாவலர் ஆவார்.
ஈழத்தில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும் கூட இவரது தமிழ் மற்றும் சைவப் பற்றானது இவரை தமிழ்நாடு வரை சென்று பணியாற்ற வைத்தது.
இவரது வாழ்க்கை, கல்வி, பணிகள், இவர் எழுதிய நூல்கள் தொடர்பாக விளக்குவதாக இக்கட்டுரையானது அமைந்துள்ளது.
வாழ்க்கை
ஆறுமுக நாவலர் இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நல்லூர் எனும் ஊரில் 1882 டிசம்பர் 18 ஆம் திகதி கந்தப்பிள்ளை மற்றும் சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகனாகப் பிறந்தார்.
இவரது இயற்பெயர் ஆறுமுகன் என்பதாகும். இவரது தந்தை, தாத்தா, பூட்டன் ஆகியோர் தமிழறிஞர்களாக இருந்ததுடன் அரச ஊழியர்களாகவும் இருந்துள்ளனர்.
இவ்வாறான பெருமைமிக்க குடும்பப் பின்னணியில் இருந்து வந்த இவர் பிற்காலத்தில் சைவ மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ஆனார்.
கல்வி
ஐந்தாவது வயதில் கல்வி கற்க ஆரம்பித்த இவர் சுப்பிரமணிய உபாத்தியரிடம் நீதி நூல்களையும் தமிழையும் கற்றார். பின்னர் சரவணமுத்து புலவரிடமும் சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வியை கற்றுக் கொண்டார்.
12 வது வயதில் தமிழ், சமஸ்கிருதம் மொழிகளில் புலமை பெற்றார். பின்னர் முன்னணி ஆங்கில பாடசாலையான வெஸ்லியன் பள்ளியில் ஆங்கிலம் கற்று திறமை பெற்றதோடு அதே பள்ளியில் தனது 19 வது வயதில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார்.
பணிகள்
இவரது பணிகள் சைவ சமயத்திற்கும் தமிழிற்கும் அளப்பரியவையாகும். அந்த வகையில் சைவ சமயத்தை வளர்க்கும் பொருட்டு பிரசங்கம் செய்வதை வழக்கமாக்கி கொண்டார்.
இவரது பிரசங்கங்களின் விளைவாக சமய விழிப்புணர்வு ஏற்பட்டது. சைவப் பிள்ளைகளுக்கு நூல்களை அச்சிடுவதற்காக தனது இல்லத்திலேயே அச்சுக் கூடம் ஒன்றினை நிறுவி பல நூல்களை அச்சு வடிவில் உருவாக்கி மாணவர் கைகளில் கிடைக்கச் செய்தார்.
இவரது பணி தமிழகத்திலும் கூட பரவியிருந்தது. அங்கு திருவாடுதுறை, இராமநாதபுர சமஸ்தானம், மதுரை மீனாட்சி அம்மன் சந்நிதானம், குன்றக்குடி என பல இடங்களில் பிரசங்கங்கள் செய்து புகழ் பெற்றார்.
அத்துடன் தமிழகத்தில் பல சைவ பாடசாலைகளை நிறுவியதுடன் பல நூல்களையும் அச்சிட்டு வெளியிட்டார்.
நூல்கள்
இவரால் எழுதப்பட்ட அல்லது பதிப்பு செய்யப்பட்ட நூல்களாக இன்று வரை நூற்றுக்கும் அதிகமான நூல்கள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் சில நூல்கள் பின்வருமாறு.
- திருக்குறள் பரிமேலழகர் உரை
- திருவிளையாடல் புராணம்
- அகத்தியர் அருளிய தேவத்திரட்டு
- இலங்கை பூமி சாஸ்திரம்
- ஏரெழுபது
- கந்தபுராண வசனம்
- சிவராத்திரி புராணம்
- சேது புராணம்
- திருக்கை வழக்கம்
- திருத்தொண்டர் புராணம்
- திருமுருகாற்றுப்படை
- நன்னூல் விருத்தியுரை
- போலியருட்பா மறுப்பு
- வக்கிரதண்டம்
- வாக்குண்டாம்
- விநாயக கவசம்
போன்றவற்றை குறிப்பிடலாம்.
முடிவுரை
இவ்வாறான சைவப்பெருஞ் சேவைகளையும், தமிழ் வளர்ப்பினையும் செய்த ஆறுமுக நாவலர் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி 1879 ஆம் ஆண்டு தனது 56 வது வயதில் இயற்கை எய்தினார்.
இவர் இறந்தாலும் பதிப்பாளராகவும் வைச பிரசங்கராகவும், கல்விசாலை நிறுவனராகவும், எழுத்தாளராகவும் இவர் ஆற்றிய அரும் பெருஞ்செயல்கள் இவரது புகழை பறை சாற்றுபவையாக இருக்கின்றன.