வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வறுமை மட்டம் அதிகமாக உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர்கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
வீடு மற்றும் அதனைச் சார்ந்த குடும்பத்தினரின் கடன் அதிகரித்து வருகின்றது.
போருக்குப்பின்னர் குடும்பங்கள் தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு சவால்களைஎதிர்கொண்டுள்ளன.
அதிகரிக்கும் கடன்படு நிலை தொடர்பாக இலங்கை மத்திய வங்கி ஆய்வு நடத்தி, அதன்முடிவுகளுக்கு அமைய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய வங்கி ஆளுநர்குறிப்பிட்டுள்ளார்.

2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், இடம்பெயர்ந்த குடும்பங்கள் தமது சொந்தநகரங்களுக்குத் திரும்பி வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு போராடி வருகின்றன.
30 ஆண்டுகளாக இழப்புக்களைச் சந்தித்தவர்கள், தமது வாழ்வாதாரத்துக்காக கடுமையாககடன்களைப் பெற வேண்டிய நிலையில் உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.




















































