தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 31வது ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை ; பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை அனுஸ்டிக்கப்பட்டுள்ளது
இதன் போது யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் பபில்ராஜ் நினைவேந்தல் உரையினையாற்றினார், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இ.கிரிசாந்தன் மலர் மாலை அணிவித்த நிலையில்p மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் வு.கௌரிதரன் பொதுச்சுடரை ஏற்ற அதனைத்தொடர்ந்து மாணவர்கள் நினைவுச்சுடரினை ஏற்றினர்.

























































