தமிழீழம் எங்கும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக போராடிவந்த தாய்மார்களில் இதுவரை 14 பேர் மன உளைச்சலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்களின் ஏற்பாட்டாளர்களாலும், தாய்மார்களாலும் வழங்கப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி இத்தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழம் மாவட்டங்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை தொடர்ந்து நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றிருந்தவர்களே இவ்வாறு உயிரிழந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பலரது உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதை தம்மால் உணர முடிகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் நேற்றுடன் 500 நாட்களை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.