சாவகச்சேரி நகரின் மாட்டிறைச்சி கடைக்கு அருகில் நீண்ட காலமாக அனுமதியின்றி மாடுகளை அழிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கட்டடம் சாவகச்சேரி நகர சபையினரால் சீல் வைக்கப்பட்டது.இங்கு இயங்கி வந்த இறைச்சி கடைக்கு அருகில் சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைபாட்டை அடுத்து விசாரணைக்கு சென்றபோது அங்கு சட்டவிரோதமாக மாடுகளை கடத்தி வெட்டப்பட்டமைக்கான சான்றுகள் இருப்பதை சுகாதார அதிகாரிகள் அவதானித்தனர்.
இதனையடுத்து, இறைச்சி கடையை இயக்கி வந்த இறைச்சி கடை உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினர்கள், சுகாதார பிரதிநிதிகள் பொலிசார் நேரில் சென்று பரிசோதனை செய்து சீல் வைத்தமை குறிப்பிடத்தக்கது.




















































