ஐக்கிய தேசியகட்சியின் மறுசீரமைப்பு குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் கட்சியின் தலைமைத்துவத்தை புதியவர்களுக்கு வழங்கதயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுகூட்டம் அலரிமாளிகையில் இன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
கூட்டுஎதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க அனைத்து அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது யோசனைகளை முன்வைத்தனர்.




















































