ரஜினி கட்சி கொடி மற்றும் பெயர் அறிவிப்பு நிகழ்ச்சிஇ மதுரையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில்இ ரஜினி ரசிகர் மன்றம் சார்பில்இ ரசிகர்களுக்கு பாராட்டு விழாஇ ரஜினியின்இ 68வது பிறந்த நாள் விழாஇ நலத்திட்ட உதவி வழங்கும் விழா எனஇ முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
இதில்இ சிறப்பு விருந்தினராக பங்கேற்றஇ நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியபோது
ரஜினிஇ நாட்டுக்கு என்ன செய்தார் என கேட்பவர்களுக்குஇ ஒன்றை கூறிக் கொள்கிறேன். ரஜினி ஆரம்பத்தில் போட்ட விதை தான்இ இப்போதுஇ எங்களைப் போன்று மரமாக வளர்ந்து நிற்கிறது.
அவர் ஆரம்பித்த திருமண உதவிஇ மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உள்ளிட்ட பல விஷயங்களைஇ நான் உள்ளிட்ட ரஜினி ரசிகர்கள் செய்து வருகின்றோம். நான் இதுவரைஇ 141 பேருக்குஇ இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய உதவியுள்ளேன். 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குஇ ஆதரவு அளித்து உள்ளேன். தாய்க்கு கோவில் கட்டியுள்ளேன். அவரது எளிமை தான்இ எங்களின் வழி. தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்றஇ நோக்கத்தில் தான்இ அவர் அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆன்மிக அரசியல் என்பதுஇ மதத்தை சார்ந்தது அல்ல. அனைத்து ஜாதிஇ மதத்தை ஒருங்கிணைப்பது தான் ஆன்மிக அரசியல். மதுரை ராசியான மண். இந்த மண்ணில் இருந்து தான்இ ரஜினிஇ அரசியல் பிரவேசத்தை துவங்குவார். இதற்காகஇ மதுரையில் முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போதுஇ கட்சியின் பெயர்இ கொடிஇ சின்னம் ஆகியவை அறிமுகம் செய்யப்படும். விரைவில்இ இதற்கான அறிவிப்பு வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.