ஆயிரம் வார்த்தைகள் எழுதினாலும் சொல்ல முடியாத உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது நிஜவாழ்க்கையில் சில படங்கள் நம்மை வாயடைத்து போக செய்யும். அவை நம் மனதில் அழியா நினைவாக பதியும். எப்போது நினைத்தாலும் கண்ணெதிரே ஒரு கானல் நீர் போல தோன்றி மறையும்.
புகைப்படம் என்பது நினைவுகளை சேமிக்கும் ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை ஒரு புகைப்படம் உணர்த்தி விடும். மக்களிடம் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் புகைப்படத்துக்கு மட்டுமே உண்டு. சில படங்கள் நம்மை வாயடைத்து போக செய்யும். அவை நம் மனதில் அழியா நினைவாக பதியும். எப்போது நினைத்தாலும் கண்ணெதிரே ஒரு கானல் நீர் போல தோன்றி மறையும்.
புகைப்படம் என்பது நினைவுகளை சேமிக்கும் ஒரு அற்புத கலை. சில சமயங்களில் சிரிக்கவும், பல சமயங்களில் அழவும் வைக்கும். உலகின் பல கொடூரமான விபத்துகள், போர்கள், போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில புகைப்படங்கள் அந்த காலத்திலேயே உலகளவில் வைரலானது மட்டுமின்றி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
மனித உரிமை மீறல், சுற்றுப்புறச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்ட வண்ணம் இருந்து வருகிறது. அவை எல்லாவற்றிலும் இருக்கும் அடிப்படை காரணத்தை அறிந்து ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வர வேண்டும். என்னுடைய எதிர்கால திட்டத்தின் படிகளும் இதை நோக்கியே தான் இருக்கின்றது.
அந்த புகைப்படங்களின் தொகுப்பு தான் இது…
படங்கள் – நிலவன்