உடல்நலக்குறைவு காரணமாக பேரறிவாளன் சென்னை ராஜிவ் காந்தி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றார். அண்மையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை காண 2 மாத சிறைவிடுவிப்பில் (பரோலில்) வந்திருந்தார்.
பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்காக பேரறிவாளன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் உடல் நல குறைவு காரணமாக பேரறிவாளன் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புழல் சிறையில் சிறை வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று, ரத்த அழுத்தம், எலும்பு,நரம்பு தொடர்பான சிகிச்சை அளிப்பதற்காக ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க அழைத்து செல்லப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




















































