மனதில் எரியுது நெருப்பு
எம் மீது உனக்கேன் வெறுப்பு
கடமைக்கு தேவை பொறுப்பு
இதை நீ இழந்தால் நாளை செருப்பு
எம் கனவுகள் கறுப்பு
நினைவுகளே தினம் இருப்பு
உனக்கும் சிதையும் உறுப்பு
அன்று புரியும் பலர் சிரிப்பு
நீதிக்கு உன் பதில் மறுப்பு
நிறைவாக உன்னிடம் கொழுப்பு
புரியாதா எம்மவர் துடிப்பு
வேட்டியில் நீயோ நடிப்பு
பணமே உனக்கு மடிப்பு
பதவியே உனக்கான எடுப்பு
காட்டாதே எம் மீது செருக்கு
ஓடுவாய் தெருவோரம் மிடுக்கு
பயமுறுத்தி சிலர் நகைப்பு
எம் விழிகள் கொஞ்சம் திகைப்பு
புரிவீனம் பலர் சிதைப்பு
மலருவோம் நாமோ உயிர்ப்பு
எதற்காக இந்த வெடிப்பு
என் வரிகளோ தடிப்பு
நீயோ என்னையும் பிடிப்பு
நடவாது ஒருபோதும் முடிப்பு
நரிக் கூட்டம் சில கடிப்பு
ஆணவமே உன் படிப்பு
எம் மீது ஏன் கடுப்பு
மண் தானே எம் அடுப்பு
– வன்னியூர்_கிறுக்கன்
எச்சரிக்கைப் படைப்பு
