கடந்த எட்டு மாதங்களில், இலங்கையர், 1,141,000 க்கும் மேற்பட்ட இலங்கையர், வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புத்தேடி சென்றுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
அதில், பெண்கள் 48,374 பேரும், ஆண்கள் 93,351 பேரும் அடங்குகின்றனர். ஆகக்கூடுதலாக, 42,389 பேர் மேல் மாகாணத்திலிருந்தே சென்றுள்ளனர். குறைவாக ஊவா மாகாணத்திலிருந்து 3,994 பேர் சென்றுள்ளனர்.
இக்காலப்பகுதிக்குள் வீட்டுப் பணிப்பெண்களாக,37,002 பேர் பயணித்துள்ளனர் என்றும் அந்த பணியகம் தெரிவித்துள்ளது.




















































