இலங்கை கிரிக்கெட் சபையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட புதிய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் இன்று நியமனம் வழங்கப்பட்டது.
கிரஹாம் லெம்ரோய் (தலைவர்), காமினி விக்ரமசிங்க, ஜெரீ வவுடர்ஸ், சஜித் பெர்ணான்டோ மற்றும் அசங்க குருசிங்க ஆகியோர் இவ்வாறு நியமனத்தைப் பெற்றுக்கொண்டனர்.




















































