இந்த வருடத்திலிருந்து க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களும் உயர்தரத்தில் கல்வி கற்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நான்கு முக்கிய குறிக்கோள்களைக் கொண்டு 13 வருடங்களுக்கு தொடர்ச்சியாகக் கல்வியை வழங்குவதே இதன் நோக்கம் எனவும் கல்வி அமைச்சின்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த வருடத்திலிருந்து சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களும் உயர்தரத்தில் கற்கமுடியும்எனவும் அறிவித்துள்து.
மாணவர்களை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச்செய்யும் நோக்குடன், அவர்களின் சமூக மற்றும் தொழிநுட்பத் திறன்களை விருத்தி செய்வதே இதன் நோக்கம் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.




















































