சகல மாகாண முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களின் இணக்கப்பாட்டுடன் அனைத்து மாகாண சபைகளையும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதிக்குள் கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, நீதியானதும் சுதந்திரமானதுமான மக்கள் இயக்கம் (கபே) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கமைவாக, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இந்த யோசனை அறிவிக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்புத் தெரிவித்துள்ளது.




















































