சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதி ஒருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று வைத்தியர்களின் அனுமதி பெறப்படவேண்டுமென சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
விசேட அரசியல் கைதிகளை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு சலுகைகள் காண்பிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டினையடுத்தே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் கைதி ஒருவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டுமாயின், சிறைச்சாலைக்குப் பொறுப்பான வைத்தியர், வெளிக்கள வைத்தியர் மற்றும் சிறை அறை வைத்தியர் ஆகியோர் பரிந்துரை செய்யவேண்டும்.
இதன்பின்னர் குறித்த பரிந்துரையை சிறைச்சாலைகள் அமைச்சருக்கு அனுப்பி வைக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.