கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சிங்கப்பூர் நோக்கி இந்த வெளிநாட்டு நாணயங்களை எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எமிரேட்ஸ் விமானத்தின் ஊடாக இந்த நபர் சிங்கப்பூர் செல்ல முயற்சித்துள்ளார்.
இதன்போது குறித்த நபர் தொடர்பில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரை சோதனையிட்ட போது பயணப் பொதியில் பாரியளவில் வெளிநாட்டுப் பணம் மீட்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர், ஸ்ரேலிங் பவுண்ட்ஸ், கட்டார் ரியால், குவைத் தினார் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பணத்தை அரசுடமையாக்க சுங்கப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொழும்பைச் சேர்ந்த 44 வயதான குறித்த சந்தேகநபர் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.




















































