கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மனநலப் பிரிவு மற்றும் வைத்திய நிபுணர் விடுதி ஆகியவை இன்று வடமாகாண முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு விடுதிகளும் இன்று காலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் 17.3மில்லியன் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இக்கட்டடங்கள் கட்டப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் பல வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்தன் ஒரு கட்டமாகவே மனநல மருத்துவப் பிரிவு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர், வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம், வை.தவநாதன், மாகாண சுகாதாரப் பணிப்பாளா் கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் மைதிலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.























































