இந்தியா, காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதியான குப்புவா மாவட்டத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகள் ஐவர், படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மூன்று மணித்தியாலங்களுக்குள் பயங்கரவாதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என பிரிகேடியர் தளபதி ஆர்.கே.சுரேஷ் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த முற்றுகை நடவடிக்கையின்போது, பாரியளவிலான ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் மருந்துப் பொருட்களையும் பாதுகாப்புப் படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.




















































