அரசியலமைப்புச் சட்டத்தின்படி எனது ஆசியின்றி எவரும் ஆட்சியமைக்கமுடியாது என சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 113நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததும் ஆட்சியமைத்துள்ள இந்த அரசாங்கத்தினதும் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினதும் காலம் முடிவடைந்துவிடும் என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ‘நாடாளுமன்ற ஆசனங்களை மாற்றி புதிய அரசாங்கத்தை மாற்றி அமைகக்கலாம் என சில குழுக்கள் கனவு காண்கின்றன.
ஆனாலும், புதிய ஆட்சியை அமைக்க எனது ஆசி தேவையென்பதை எவரும் மறந்துவிடக்கூடாது.
அரசியலமைப்புச் சட்டத்தின் படி எனது ஆசியின்றி எவரும் ஆட்சியமைக்க முடியாது.
எனது அரசாங்கம் அனைத்துத் தடைகளையும் தாண்டி தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. வெற்றுக் கோசங்களை எழுப்பும் சிலர்தான் குழப்பம் விளைவித்து வருகின்றனர் எனத்தெரிவித்தார்.




















































