யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த சார்ஜன்ட் கேமரத்னவுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது கடந்த 22ஆம் நாள் நல்லூர் பின் வீதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் கடுமையான காயங்களுக்குட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சார்ஜன்ட் கேமரத்ன சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது





















































