காதலின் நாயகனே
கடந்து வந்த
சித்திரையில்
இல்லாத சிறப்பு
இந்த சித்திரைக்கு
என் மனதில் நீ
சம்மணம் போட்டு
அமர்ந்த இனிய
வருடமல்லவா
இந்த சித்திரை
கார்த்திகை பூவுக்குள்
மலர்ந்த நம்
களங்கமில்லா
காதலுக்கு
சொந்தக்காரன் நீ
சித்திரையில் நீ என்
மனதுக்குள் மலர்ந்த்தால்
நமக்கு இது புது அனுபவம்
என் புதுவருடத்துக்கு
புதுமை சேர்த்தது உன் உறவு
என்னை திருடிச்சென்ற
அழகிய கிறுக்கன் நீ
ஓ ஆணுக்குள்ளும்
ஒரு பெண்மை
உண்டென
உனை பார்த்தே
அறிந்தேன் நான்
என் நித்திரையை
பறித்து போன
சித்திர குப்தன் நீ
இந்த சித்திரையை
மணம் முடிக்க
நீ வரும் காலம்
கார்த்திகை பூக்கள்
பூக்கும் கார்த்திகை
மாதமாக இருக்கட்டும்
கனிவான என்
காதலின் நாயகனே
– காவியா





















































