ஜேர்மனியின் மின்டன் மேற்கு நகரில் துறைமுகமொன்றில் படகு ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் தீயணைப்பு வீரர்கள், பொலிஸ் அதிகாரி உட்பட 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
குறித்த படகில் நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வந்த நிலையிலேயே, படகு வெடித்து சிதறியுள்ளது.
படகில் ஏற்பட்ட தீயில் படகின் மின்கலம் வெடித்ததிலேயே இப்பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
எனினும் இக்காரணத்தை உறுதிசெய்ய முடியாது எனத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




















































