படகுகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த தீ இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் ஏற்பட்டதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தீயணைப்பு பிரிவினரால் இந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அதேவேளை, தீ பரவியமைக்கான கரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




















































