தேசியத்தலைவர் பிரபாகரனின் இலட்சியத்தினையும் தியாகத்தினையும் தான் மிகவும் மதிப்பதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
றெட்பிக்ஸ் என்ற ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்அவர் தெரிவிக்கையில்,
தலைவர் பிரபாகரனைப் பற்றி யார் என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் நான் அவரின் இலட்சியத்தினையும் தியாகத்தினையும் பெரிதும் மதிக்கின்றேன்.
ஏனெனில் அவர் தனது இலட்சியத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை. அவர் போராளிகளை மட்டும் போர்க்களத்துக்கு அனுப்பவில்லை. தானும் போரிட்டார், தனது பிள்ளைகளையும் போருக்கு அனுப்பினார். அவர் தனக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயம் என்று வாழவில்லை.
அத்துடன் அவர் புறமுதுகிட்டு ஓடிப்போய் இன்னொரு அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியும் கேட்கவில்லை.
அவர் எந்தக் கொள்கைக்காப் போராடினாரோ அதே கொள்கையில் உறுதியாக இருந்தார் எனவும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்




















































