பூண்டுலோயா பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் ஒன்பதில் கல்வி பயின்று வரும் கவிஸ்க தனஞ்ஜய வீரக்கொடி என்ற மாணவரே உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
பாடசாலையில் மாணவிகளின் கதிரைகளில் ஒரு வகை பசையை பூசிய சம்பவம் தொடர்பில் குறித்த மாணவரும் ஏனைய சில மாணவர்களும் தொடர்புபட்டிருப்பதாக பாடசாலை நிர்வாகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடத்த பெற்றோரை அழைத்து வருமாறு குறித்த மாணவர்களுக்கு, பாடசாலையின் அதிபர் உத்தரவிட்டிருந்தார்.
இதன் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




















































