கார்த்திகை காதல்
கார்த்திகை பூக்களை
காதலித்த கண்மணிகளின்
கனவுகள் உறங்கும் தேசம்
ஈழமண்ணே…
என் இதயத்தில்
மணம்வீசும்
இதயத்தாமரையே
உன்னை நேசித்தால்
மோட்சம் கிட்டுமென…
உணராதா மானிடரில்
நானும் ஒருத்தியல்ல
கண்மணி உன்னை
காதலிக்க…
உன்னை காதலித்து
தீக்குளிக்க…
வல்லமைகள் வேண்டுமடி
சிற்றின்ப மானிடர்
பலகோடியில்…
பேரின்பம் கொண்ட
புலிப்பிள்ளைகள்…
வாழும் கார்த்திகைத் தேசம்
களங்கப்படவில்லை
காத்திருக்கின்றேன்
உன் மகவாய்…
என் கண்ணீர் துடைக்கும்
தலைவனின் வருகைக்காக….
ஈழக்காதல்
– காவியா




















































