விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட ஆயுதங்களைப் பார்வையிட்ட வெளிநாட்டுத் தூதுவர்கள் அவைகளை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
குறிப்பாக ஜொனி மிதிவெடியினைப் பார்த்தே அவர்கள் வியப்படைந்தனர்.
விடுதலைப் புலிகளின் பல ஆயுதங்களுக்கு மற்றும் அவர்கள் பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பங்கள் வியப்பளிப்பதாக சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் வியப்படைந்துள்ளனர்.
வெடிபொருள் அபாயமற்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த பல மிதிவெடிகள் அகற்றப்பட்டு அவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த வெடிபொருட்களைப் பார்வையிட்ட அமெரிக்க, கனடா, ஜப்பான் தூதுவர்களுக்கு இராணுவத்தினர் விளக்கமளித்திருந்தனர். இதன்பின்னரே இவர்கள் தமது வியப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.




















































