எந்தக் கட்சிக்கூடாகவேனும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சுப் பதவியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கலாம் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
தற்போது வடமாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள இரண்டு அமைச்சுக்களுக்கும் அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக நேற்றையதினம் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சுக்களை அமைப்பது தொடர்பாக புளொட் அமைப்பின் கருத்தைக் கேட்டபோது, கட்சி ரீதியில் கோரிக்கையை விடுத்து நான் முதலமைச்சருக்கு நெருக்கடியைக் கொடுக்க விரும்பவில்லை. அதேநேரம் அமைச்சுப் பதவியை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்கலாம்.
இநநிலையில், ஊகங்களின் அடிப்படையில் சிலரின் பெயர்கள் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கிவிட்டன.
இதுபற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. முதலமைச்சர் இரண்டு அமைச்சுப் பதவியையும் ஒரே மாவட்டத்திற்கு வழங்குவார் என நான் நினைக்கவில்லையெனத் தெரிவித்தார்.




















































