தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் விடிவு இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியொன்றின் நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், அண்மையில் நடைபெற்ற வடமாகாண குழப்பத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவுசெய்யாமையே காரணமென கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்வதற்கு எந்தவொரு இடையூறுகளும் இதுவரை ஏற்படவில்லை. ஆனால் இதில் இணைந்துள்ள மூன்று கட்சிகளும் சம அந்தஸ்துக் கேட்பதுடன், இதிலிருந்து தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்வதே அவர்களின் நோக்கம் எனவும்தெரிவித்துள்ளார்.
அத்துடன் அண்மையில் நடைபெற்ற வடமாகாண பிரச்சனையின்போது ஈபிஆர்எல்எவ், ரெலோ, புளொட்போன்ற அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சிமீது தாக்குதல் நடாத்துபவர்களாகவே இருக்கிறார்கள் எனவும்குறிப்பிட்டுள்ளார்.