கேப்பாப்புலவில் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் வழிபாட்டிற்குச் சென்ற மக்களை அங்குவைத்து பிரதான வாயிலை இராணுவத்தினர் மூடியுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்துக்காக கேப்பாப்புலவு பிரதான வீதி இன்றையதினம் இராணுவத்தால் திறந்து விடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆலய உற்சவத்துக்குச் சென்ற மக்கள் தமது காணிகளைப் பார்த்து கதறியழுதவாறு ஆலயத்திற்குச் சென்றனர்.
இதனால் ஆலயத்தைவிட்டு மக்கள் வெளியே வரமுடியாதவாறு இராணுவத்தினர் பிரதான வாயிலை மூடியுள்ளனர்.




















































