சவுதி அரேபியாவின் இளவரசர் மஜீட் பின் அப்துல்லா சூதாட்ட மோகத்திற்கு ஆளாகி உலகம் முழுவதும் புகழ் பெற்றவர். அண்மையில் எகிப்து சென்ற அவர் அங்குள்ள சினாய் கிராண்ட் கேசினோ சூதாட்ட விடுதியில் ஆறு மணி நேரம் சூதாட்டம் ஆடி தோற்றுள்ளார்.
அதுவும் மில்லியன் கணக்கில் பணத்தை பந்தையம் கட்டி விளையாடியுள்ளார்.
இதனால், பந்தய பணமான 350 பில்லியன் டொலர் பணத்தை கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவரிடம் போதிய பணம் இல்லாததால், 25 மில்லியன் டொலர் தொகை பாக்கி வந்துள்ளது.
அதைக் கொடுக்க முடியாத நிலையில், தனது 5 மனைவிகளை அந்த விடுதியிலேயே அடமானம் வைத்துவிட்டு சவுதிக்கு தனியே வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது அவரது மனைவிமாரின் நிலை கேள்விக்குறி ஆகிவிட்டது. சவுதி அரச குடும்பத்தினர் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கிறதா என்பதும் தெரியவில்லை.
பணம் கொடுக்காத பட்சத்தில் அவர்களை விரைவில் ஏலத்தில் விற்றுவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.




















































