மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் எனும் சீன நிறுவனத்துடன் செய்துகொள்ளப்படவுள்ள மேற்படி உடன்படிக்கை தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்ட மஹிந்த சமரசிங்க தாமே நேரடியாக பேசவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திறகு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக இதற்கு முன்னர் அமைச்சர்களான சரத் அமுனுகம, மலிக் சமரவிக்ரம மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் பலகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த போதிலும், எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், தாம் நேரடியாக தலையிட்டு இவ்விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் இணக்கப்பாடொன்றை எட்டவுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.




















































