இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்வேறு அரச தலைவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
ஆடம்பரம் இல்லாத இயல்பான மனிதராக மைத்திரி செயற்படுவதால், நாட்டு மக்களின் உள்ளங்களை மிகவும் கவர்ந்துள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதி இயல்பான குணத்தினை வெளிப்படுத்தும் மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த 23ம் திகதி அவுஸ்திரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, இரு விமான பயணங்கள் மூலம் அங்கு சென்றடைந்தார்.
அவுஸ்திரேலியா செல்வதற்காக சிங்கப்பூரில் விமான நிலையத்தில், சாதாரண பயணிகள் இடத்தில் ஓய்வெடுத்துள்ளார்.

இது தொடர்பில் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் மற்றும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
போலியாக பிரபு போல் நடிக்காமல் இலங்கை ஜனாதிபதி ஓய்வெடுகின்றார்.. என ஹர்ஷ அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.





















































