அழகாலும், திறமையான நடிப்பாலும் எல்லோரையும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி சினிமா துறைக்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அவர் தற்போது நடித்துள்ள 300ஆவது திரைப்படம் ‘மாம்’.
அவர் 1967ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் திகதி துணைவன் என்ற படத்தின் மூலமாகக் குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தார் ஸ்ரீதேவி.
தற்போது நடிகை ஸ்ரீதேவி வயதுக்கு ஏற்றபடியான கதைகளில் நடித்து வருகிறார். அவர் தற்போது நடித்துள்ள படம் ‘மாம்’. இது இவரது 300ஆவது படம் .ஸ்ரீதேவியின் சினிமா துறையின் 50 ஆண்டு சாதனையைக் கொண்டாடும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கப்பூர் “மாம்“ படத்தை எதிர்வரும் ஜுலை 7ஆம் திகதி வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தின் தமிழ், தெலுங்கு, ஹந்தி, மலையாளம் என அனைத்து பதிப்புகளிலும் நடிகை ஸ்ரீதேவி டப்பிங்கில் பேசுவுள்ளதாகப் படக்குழுவினரால் கூறப்படுகிறது. இப்படத்தை ரவி உத்யவார் இயக்கியுள்ளார். படத்திற்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




















































