இலங்கைத்தீவில் பரந்துவிரிந்த கொடிய போரில், வாழ்வதற்காய் போராட வேண்டிய ஒரு வரலாற்றுக் கட்டத்தில், எமது தமிழினம்சந்தித்த சவால்களும்அழிவுகளும் பெரியவை.
உலக வல்லாதிக்க நாடுகளின் ஒட்ட மொத்த ஆதரவோடு,சுதந்திரத்திற்காய் எழுந்த குரல்கள் பயங்கரவாதம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் சிறுமைப் படுத்தப்பட்டு இன்று அழிக்கப்பட்டது.
சமாதானத்திற்கான போரென விரிக்கப்பட்ட சதிவலையில்,….. மனிதாபிமானத்திற்கான போரென மாற்றப்பட்ட மாறுபட்டசூழலில், உலகமே மௌனமாக பார்த்திருக்க எமது உறவுகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இழந்த வரலாறும், அப்போரின் அவலங்களையும் சிறைவாழ்வையும் புலம்பெயர்ந்தும் தமது சுதந்திர வாழ்வை உறுதிப்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலையில், எமது மக்கள் உள்ளனர்.
உலக இராணுவ வரலாற்றில் எந்தவொரு இராணுவமும் செய்யாத மிகக் கீழ்த்தரமான , மிருகத்தனமான ஈனச் செயல்களை அங்கே எம்மினத்தின் மீது கட்டவிழ்த்து விட்டிருந்ததல்லவா.
அங்கே களத்திலே வீழ்ந்த பெண்களின் துயிலுரிந்த படை வீரர்களையும், பிணத்துடன் புணர்ந்த காமுகர்களையும் இறந்த பெண்களின் மார்பினை அறுத்த சிங்களத்தின் கொடுமையை யாரும் அறிந்ததுண்டா?
வயது வந்த மகனும் தாயும், வயது வந்த மகளும் தந்தையும்,வயது வந்த அண்ணனும் தங்கையும்,வயது வந்த மச்சானும் மச்சாளும், வயது வந்த அயலவனும் அயலவளும், அதிகாரியும் பணியாளரும், மருத்துவரும் தாதியும் நிர்வாணமாய் இராணுவத்திடம் சரண் அடைந்த துர்ப்பாக்கிய நிலையை எம்மனித மொழிகளில் சொல்லிட முடியும்.
இன்னும் எத்தனை?
எத்தனை? கொடுமைகள்?
உள்ளதோ அத்தனை கொடுமைகளும் அந்த முள்ளிவாக்கால் மண்ணிலே நடந்தேறின.
அன்பான உறவுகளே
எமது அவலவாழ்வும் எமது இனம்பட்ட வேதனைகளும்இ உலகத்தின் கதவுகளுக்கு உரியமுறையில் சொல்லப்படவில்லை.இதனை பதிவு செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு.
அந்தவகையிலேயே எமது மக்கள் மீது தொடுக்கப்பட்ட இனவழிப்பு போரை நினைவுகொள்ளும் மேமாதத்தின் கனத்த நினைவுகளைச் சுமந்தவாறு இரண்டு படைப்புகளை முன் கொண்டுவருகின்றோம்.
புலம்பெயர் வாழ் ஈழப் படைப்பாளியான அறிவுச்சோலை நிலவனின் ‘ஈழப்படு கொலையின் சுவடுகள் 2009 பாகம் 01 , பாகம் 02 எமது உறவுகளின் குரல்களை பதிவு செய்கின்றன.
நடந்து முடிந்த பேரவலத்தின் விளைவுகளை இனியாவது கூட்டாக எதிர்கொள்ளல் வேண்டும். இதிலிருந்து கூட நாங்கள் கூட்டாக மீள எழவில்லை எனில் வரலாறு ஒரு போதும் மன்னிக்காது.
நன்றி!