தனித்தனி இராச்சியங்களாக இருந்து வந்த இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் தேதி, தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த–சிங்கள பேரினவாதம்ஐக்கிய இராட்சியத்திடமிருந்து விடுதலை பெற்ற அதே நாளிலிருந்து அரசியல் அதிகாரம் கைமாறியதைஅடுத்து சிங்களப் பேரினவாதம் மேலாண்மைப் பெற்றது. இதனால் தமிழர்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகுரூரமான வன்முறை வடிவம் எடுத்தது.
ஈழத்தமிழர்கள் அடிமை வாழ்வுக்கு தள்ளப்பட்ட நாட்டை பிரிட்டன் தாரை வார்த்த இருண்ட நாள். இந்த நாள், பௌத்த–சிங்கள பேரினவாத நாட்டின் 76ஆவது ஆண்டு சுதந்திர நாள் தமிழர்களுக்கு கறுப்பு நாள் வரலாறும்ஆரம்பித்திட மக்களுக்கு வெளிப்படையாக 76ஆண்டு கால அடக்குமுறை வாழ்வில் தொடந்து இந்த நாளைகறுப்பு நாளாக அடையாளப்படுத்தி சிறிலங்கா அரச பயங்கரவாத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்திவருகின்றார்கள்.
ஒரு தேசிய இனமாகிய தமிழ் இனத்தின் மொழி, கலை, பண்பாட்டு, வளக்காறு விழுமியங்கள் கொண்ட தமிழர்தேசத்தின் பொருளாதார வடிவமானது நிலமானிய சமூகத்தன்மையைக் கொண்டிருந்த போதும் தனக்கேஉரித்தான தனிப் பண்புகளுடைய உற்பத்தி உறவுகளில் கட்டப்பட்டிருந்த யாவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுஇனவழிப்பிற்குரிய இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையும் தமிழ் இனத்தை அழிக்க பல்வேறு வழிகளில் 76 வருடங்களுக்கு மேலாக சிங்கள இனவெறி அரசுகள் செயற்பட்டு வருகின்றது. சிங்கள இனவெறி அரசின்சுகந்திர தின நாளில் தமிழர் இனவழிப்பை உலகறியச் செய்யும். அதேநேரம் தமிழர்தேசத்தின் கறுப்புநாளாகவும், தமிழர்களின் துக்க நாளாகவும் வரலாறு பதியப்பட வேண்டிய நாள் ஆகும்.
இலங்கையின் ஜனநாயக சோசலீச குடியரசு ஜனாதிபதிகளின் வரலாறு முழுவதும் தமிழின அடக்குமுறைகனகச்சிதமாக செய்யப்பட்டு வருகின்றன. பண்டா முதல் ஜெயவர்த்தன வரை சிறிமா தொடக்கம் காலத்திற்குகாலம் ஆட்சி பீடங்களில் வந்தவர்கள் முதல் இன்று ரணில் வரையிலும் தமிழரின் விடுதலை வாழ்வைஆக்கிரமித்து இன அழிப்பை செய்து வருகின்றார்கள்.
1948 முதல் (இலங்கை சுதந்திரம் அடைந்த வருடம்) தமிழர்கள் தமது வாழ்வாதாரங்களை ஒவ்வொருதுறையிலும் இழக்கத் தொடங்கினர். இலங்கையின் முதலாது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா அவர்கள் கிழக்குமாகாணத்தைத் தமிழ் மக்களின் மாகாணம் என்ற நிலையில் இருந்து மாற்றுவதற்காக 1949ஆம் ஆண்டேகல்லோயக் குடியேற்றத் திட்டத்தைக் கொண்டு ஆரம்பித்திருந்தார். நாட்டுக்குச் சுதந்திரம்கிடைத்திருந்தாலும் தமிழ் மக்களைப் பொருத்தமட்டில் இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. இந்த நாட்டில்தமிழ் மக்கள் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டே அடக்கியொடுக்கப்பட்டு வருகின்றதுடன் தமிழர்களின்நிலங்ககள், பிரதேசங்கள் கூட ஒடுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது.
1956இல் கொண்டுவரப்பட்ட ‘சிங்களம் மட்டும்‘ சட்டம் கலாச்சாரப் (மொழி) படுகொலையின் தொடக்கமாகும். இலங்கை பௌத்த சிங்கள பேரினவாத அரசு தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக கொடுக்கப்பட்ட அனுமதிப்பத்திரமே சுதந்திர தினமாகும். 1956ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் கறுப்புக்கொடி ஏற்றியதிருமலை நடராஜன் படுகொலையோடு உயிர்ப்பலி என்பது ஆரம்பித்துவிட்டது. 1958ஆம் (அதன் பின்பும்) நடைபெற்ற இனக்கலவரம் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார சரீர இனப்படுகொலையாகும்.
தரப்படுத்தல் முறை 1970இல் அறிமுகப்படுத்தப்பட்டது. பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதற்குச் சிங்களமாணவரை விடத் தமிழ் மாணவர் கூடுதலான புள்ளிகளைப் பெறவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். குறைவான தேர்வுத் தரங்களோடு சிங்கள மாணவர் எளிதாகப் பல்கலைக்கழகம் புகுந்தனர். இந்தப் பிரித்தொதுக்கும் முறை, பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையைப் பாரதூரமாகக் குறைத்தது. அவர்களுடைய உயர்கல்வி வாய்ப்புக்களும் தடைப்படுத்திமுடக்கப்பட்டது.
1972இல் கொணரப்பட்ட குடியரசு யாப்பின் மூலம், இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடாக பிரகடனப்பட்டது. தமிழர் படுகொலைகளும் தொடர்ந்த வண்ணமிருக்க தமிழர்களுக்கான அறவழிக் கட்சிகள் தமிழர்களின் அரசியல் சுதந்திரத்தை, தமிழ்த்தேசிய அடையாளத்தை காப்பாற்ற இணையத் துவங்கின. அவர்களும் இலட்சியத்தின் பாதைகளை விட்டு பாராளுமன்றப் பதவிக்குள் முடங்கி விட்டனர். 1981இல் அரசின்அமைச்சர்களும், இராணுவ போலிஸ் படையினரும் சேர்ந்து யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரித்தமை, அரசின் இன அழிப்பு நடவடிக்கையின் உத்தேசத்தை வெளிப்படையாக எடுத்துக்காட்டியது.
மாறி மாறி நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் பல இனக்கலவரங்களை உருவாக்கி தமிழ் மக்களைக் கொன்றொழித்தது மாத்திரமல்லாமல் தமிழர்களின் சொத்துக்கள் கூட சூரையாடப்பட்டிருந்தது. தமிழ்மக்களுக்கு எதிரான வன்முறைக் கலவரங்கள் 1956, 1958, 1961, 1974, 1979, 1981 ஆகிய ஆண்டுகளிலும்1983 ஜுலையிலும் நடத்தப்பட்டன. இவ் இனவெறித் தாண்டவங்களில் பெண்கள், பிள்ளைகள் அடங்கலாக ஆயிரமாயிரம் தமிழ் மக்கள் இரக்கமின்றி, மிகக்குரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். தொடந்து நடைபெற்ற பாரியதொரு இனக்கலவரம் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை வீறு கொண்டு எழவைத்தது. அன்று தொடக்கம் தமிழர்களின் சுயாட்சிக்காக இந்த நாட்டில் சேர்ந்து வாழ முடியாது என்ற ரீதியில்தனிநாடு கோரிக்கை கொண்டு போராடியிருந்தார்கள்.
இலங்கையை ஆண்டு வந்த பல்வேறு பௌத்த சிங்கள பேரினவாத அதிபர்களால் தொடர்ந்து வெவ்வேறுவகைகளில் நடாத்தப்பட்ட இனப்படுகொலைகளில், நாகர்கோவில் விமானக் குண்டுத் தாக்குதல், செம்மணிப் புதைகுழிகள் போன்ற எண்ணிலா நிகழ்வுகள் சாட்சி பகரும். அதேபோல் கடந்த சில தசாப்தங்களாக சிங்கள இராணுவத்தால் தொடர்ந்து நடத்தப்பட்ட கொலை, பாலியல் வன்கொடுமை, சித்திரவதை, காணாமல் ஆக்கபடல், கடத்தல் ஆகிய யாவும் ஒரு சாதாரண நாளாந்த நிகழ்வின் பட்டியல் நீண்டு கொண்டு செல்லத்தொடங்கியது.
ஈழதேசத்தின் பூர்வகுடிகளான தமிழர்களின் நிலப்பகுதிகள் பௌத்த பேரினவாத சிங்களத்தால் பறிக்கப்பட்டபின்னாலும் மீதமுள்ளவையே தமிழர் பகுதிகளாக நீடிக்கின்றன. தமிழர் என்ற தேசிய அடையாளத்தை முற்றிலும்துடைத்தழிக்க துடித்த சிங்களப் பேரினவாத அரசு 2006-2009 வரையில் இனவழிப்பீல் 1,46, 679 பேர்படுகொலை செய்யப்பட்டதை புள்ளிவிபரத்தோடு சர்வதேச சமூகத்தின் முன் கோடிட்டுக்காட்டியிருந்த நேரடிசாட்சியத்தையும் இழந்து நிற்கும் தமிழினம், இராணுவ ஒடுக்குமுறைக்குள் குரல்வளை நசுக்கப்பட்டுநிர்க்கதியாக நிக்கின்றது.
தமிழர்களை கொன்ற சிங்கள ஏகாதிபத்திய கொடுங்கோல் அரசின் செயற்பாடுகளில் அன்று தொடக்கம்இன்றுவரை எவ்விதமான மாற்றங்களும் நிகழவுமில்லை; இனி நிகழப்போவதுமில்லை. ஆகவேதான் தமிழரின் இனப்பிரச்சனை விடையத்தில் சிங்கள அரசிடம் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்த மனிதநேயத்தின் மாபெரும் அருட்தந்தை மதிப்புக்குரிய இராஜப்பு யோசப் ஆண்டகை தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு சர்வதேசத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காலங்கள் கடந்தாலும் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகள் நம் இரத்தத்தை உறைய வைப்பவை. நடத்தப்பட்ட படுகொலைகள் நம் உணர்ச்சிகளை கொந்தளிக்கச் செய்பவை. ஈழத்தமிழர்களின் வரலாற்றை வாசிப்பவர்கள் கண்ணீரின்றி கடக்க முடியாத நிகழ்வுகளுள் முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை. 2009 மே 18 அந்தப் போராட்டம் மௌனிக்கப்பட்டது.
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனித்து 13 வருடங்கள் கடந்த நிலையிலும் கடத்தப்பட்டும் காணாமல்ஆக்கப்பட்டவர்கள் யுத்தத்தின் இறுதி நாட்களில் இராணுவத்தினரிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தோர் போராளிகள் மற்றும் அவர்களுடன் சேர்ந்து இராணுவத்தினரிடம் சென்ற போராளிகள்அல்லாத போராளிகளின் மனைவிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கும் என வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் கண்டறியப்படவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. புனர்வாழ்வளிக்கப்பட்ட 2009ற்குப் பின் போராளிகள் கைது செய்யபட்டும் காணாமல் ஆக்கப்படும் சூழ்நிலையில் சுதந்திரமான சுவாசக்காற்றை சுவாசிக்க தமிழ் மக்களுக்கு தடைகளே உள்ள நிலையிலும்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் தேடி அலைந்து கொண்டிருகின்றோம்.
தமிழர்களின் தாயக பூர்வீக நிலங்களில் இருந்து அரசபடை இராணுவம் வெளியேறவில்லை. அபிவிருத்தி என்ற பெயரில் தமிழரின் நிலங்கள் சூறையாடப்படுகின்றன. அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள், தொல்பொருள் திணைக்கள ஆய்வு என்று கூறி வழிபாட்டுத் தலங்கள் ஆக்கிரமிக்கபடுகின்றதன. குடும்பங்களைப் பிரிந்து சிறைகளிலும் தடுப்புக்களிலும் அகதி முகாம்களிலும் தமிழ் மக்களை தடுத்து வைத்துக்கொண்டு நடைபெறும் சுதந்திரம் யாருக்கானது?
தமிழ் மக்களிடையே தீவிரப் போக்கையும் போராட்ட உணர்வையும் வலுப்படுத்தியது. தமிழரின் ஆயுதம் தரித்தஎதிர்ப்பு இயக்கம் தோற்றம் கொள்வதெற்கான புறநிலையையும் உருவாக்கியது. ஒட்டுமொத்தத்தில் அரசஒடுக்குமுறையானது பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்குவழி சமைத்தது.
சிங்கள தேசத்தை பிரதிநிதித்துவம் செய்த பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை வேண்டுமென்றே தொடர்ச்சியாக பறித்திட தமிழ் மக்கள் கொத்துக்ககொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்ட பிள்ளைகளை இழந்தவர்களுக்கும் எமது உறவுகள் பலர் தமது பிள்ளைகளை இலங்கையின் அரச படைகளின் கையில்கொடுத்தார்கள். அவர்களையும் காணவில்லை என்று இலங்கையின் அரசு கை விரித்தது. அன்றைக்கு கையில்கொடுத்த பிள்ளைகளை காணாமல் போகச் செய்யப்பட்ட அனுபவத்தை சுமந்தவர்களுக்கும் சுதந்திர தினமா?
புலம்பெயர் நாடுகளில் இலங்கை சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கொண்டாடும் ஈழத்தமிழர்கள் தம்மை அடையாளப்படுத்திட தேசிய விடுதலையை இலட்சியமாகக் கொண்டு போராடி வரும் தமிழீழ மக்களுக்கு ஒருதேசியக் கொடி இரண்டாவது மாவீரர் நாளன்று (27.11.1990) புலிக்கொடி தேசியக் கொடியாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. எமது தேசியக்கொடியை சித்தரித்து நிற்கும் புலிச்சின்னம் எப்படி தோற்றம் கொண்டது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது? அந்தக் குறியீட்டின் அர்த்த பிரமாணங்கள் என்ன? என்பதைப் பிரகடனப்படுத்தியதை தொடர்ந்து கொடிவணக்கப் பாடலும் தேசியக் கொடியாக ஏற்றி வருகின்றார்கள். மாவீரர்கள் கனவுகளை சுமந்தவர்களாய் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்ட கொள்கையுடன் ஒருகொடியின் கீழ் அணிதிரண்டு உறுதியுடன் தமிழீழ மக்களது அரசியல் வரலாற்றுப் பாதையையில் தேச, தேசியநலனுடன் கௌரவமாகவும் நிம்மதியாகவும் வாழ் பௌத்த சிங்கள பேரினவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைத்திட வேண்டும்.
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை வடக்கு கிழக்கில் கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி பேரணி தமிழர்களின் இனப்பிரச்சினையனை தீர்த்திட, எங்கள் தாயக நிலம் விடுவிக்கப்பட்டு, இனப்படுகொலைக்கான நீதி நிலைநாட்டப்பட புலம்பெயர்வாழ் மக்கள், தமிழக மக்கள், தாயக மக்கள் எனஇவ்வளவு காலமும் நாம் பட்ட துன்பங்கள் நீங்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து இனத்தின் நீதிக்காக அணிதிரள வேண்டும். ‘வீழ்ந்துடாத வீரம்; மண்டியிடாத மானம்’ என்ற உணர்வோடு, தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி நாம் எழுப்புகிற உரிமைக்குரல் உலகின் செவிப்பறைகளில் ஓங்கிஒலிக்கட்டும்