சுனாமி பாதிப்பு ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், அதன் தாக்கம் இன்றளவும் ஆறாத வடுவாக மக்கள் மனதில் இருக்கும் ஆக்ரோஷ நினைவுகளை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
தமிழகம் பல இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துள்ளது. ஆனால், இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் ருத்திர தாண்டவமாடிய கடந்த 2004 டிசம்பர் 26-ஆம் தேதி, ஈழதேசம் மட்டுமின்றி பல நாடுகளில் ஆழிப் பேரலை (சுனாமி) தாக்கியது. 2004ஆம் ஆண்டு டிச.26ஆம் தேதி காலை நடைபெற்ற கோரச் சம்பவம். , ஈழதேச வங்கக்கடலும் கடற்கரையும் எப்போதும் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் அழகிய நெய்தல் நிலம்.
இந்நிலத்தில் அலைகள் என்பது புதிதல்ல. ஆனால் அன்றைய தினம் நடந்ததே வேறு. டிச.25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாத்திற்கு பிறகு, மக்கள் அனைவரும் புத்தாண்டு கொண்டாத்திற்காக தயாராகிக் கொண்டிருந்த வேளையில், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடல் பகுதியில், அதிகாலை வேளையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்குக் கீழே நிலத்தட்டுகள் சரிந்தன.
நிலநடுக்கத்தை அளக்கும் கருவியான சீஸ்மோகிராப் 8.3 முதல் 10 நிமிடங்கள் வரை நீடித்த நில நடுக்கங்களை இதற்கு முன்னர் எங்குமே பதிவு செய்ததில்லை. உலகின் 2-வது பெரிய அளவாக, ரிக்டர் அளவு மானியில் 9.1 முதல் 9.3 வரை இந்த நிலநடுக்கம் பதிவானது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள்.
அதுபோல், இதன் எதிரொலியால், அமைதியான கடலில் அலைகளின் கீதத்தை மட்டுமே கேட்டறிந்த மக்கள், அலறலின் கீதத்தையும் கேட்டனர். அன்றைய தினத்தில் ஏற்பட்ட அலைகளின் கோரத் தாண்டவம் மக்களைப் பீதி அடையச் செய்தது. இதுவரை செவி வழியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆழிப்பேரலையின் ஆட்டத்தை அன்று மக்கள் சந்திக்க நேரிட்டது.
சுனாமி: “சுனாமி” என்ற ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு ‘துறைமுக அலை’ என்பது பொருள். தமிழில் கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை’ எனவும் அழைக்கப்படுகிறது. ஐம்பெரும் காப்பியங்களின் ஒன்றான சிலப்பதிகாரத்தில், “பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள” என்ற வரிகள், “கடல் சினந்து ஆழிப்பேரலை எழுந்து பஃறுளி என்னும் ஆற்றையும், பல மலைகளையும், குமரிக் கோட்டையையும் மூழ்கடித்தது” என்னும் பொருளை உணர்த்துகிறது.
இதுபோன்று பரிபாடல், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களில் ஆழிப்பேரலை பற்றியும், கடற்கோள் பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே, தமிழகத்திற்குச் சுனாமி புதிதல்ல என்பதை நாம் இப்பாடல்கள் மூலம் அறிந்தாலும், 2004ஆம் ஆண்டு டிச.26ஆம் நடைபெற்ற பேரழிவால், இலக்கியத்தின் வாயிலாக அறிந்ததை, கண்கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டது.
டிசம்பர் 26 நடந்தது என்ன?: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவுக்கு முதலில் பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து, இதன் எதிரொலியால் வங்கக்கடலிலும், இந்தியப் பெருங்கடலிலும், எழும்பிய ஆழிப்பேரலைகள், இந்தோனேசியா, இந்தியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழக மக்கள் மழை, வெள்ளம், வறட்சி ஆகியவற்றை சந்தித்து வந்த நிலையில், அன்றைய தினத்தில் சுனாமியையும் சந்தித்தனர்.
பூகம்பத்தால் எழும்பிய கடல் அலைகள், மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குக் கொடூரத்துடன் பாய்ந்து, ஊருக்குள் வந்தன. சில நிமிடங்கள் நீடித்த கடல் கொந்தளிப்பு மிகப்பெரிய மோசமான இயற்கை சீரழிவுகளில் மிக முக்கிய இடத்தை பிடித்தது. இலங்கையின் கடற்கரைகளை காலை 8.50 மணியளவில் சுனாமி தாக்கியது. நீண்ட தூரம் பயணித்து வந்த நீரலைகள் கரையைத் தாக்கியது. எதிர்பார்க்கப்படாத ஒரு நிகழ்வாகவே அன்று இருந்தது.
இந்த அனர்த்தத்தினால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளவும் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றியே ஈழத்தமிழர்கள் அன்று இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறிய நேரத்தில் முல்லைத்தீவு நகரத்தின் கோலம் மாறிப்போயிருந்தது. நகரமெங்கும் சுனாமியால் சாய்க்கப்பட்ட மரங்களும், உடைக்கப்பட்ட கட்டடங்களும் நிறைந்து கிடந்தன. இடையிடையே கடல் நீர் பொங்கி வந்து நிலத்தை மூடிக்கொண்டு விடும்.பத்து அடி உயரத்துக்கு நீர் எழும்பிய இடங்கள் கூட இருக்கு.
கறுப்பான எண்ணெய் தன்மையோடு கடல் நீர் இருந்தது. ஓடிவரும் போது தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டேன்.தப்பிப்பதற்கு முயன்றேன். மரமொன்றினை இறுகப்பிடித்துக் கொண்டதால் அன்றைய சூழலிலிருந்து தப்பிக்க முடிந்ததாக முல்லைத்தீவில் சுனாமியில் சிக்கிப்பிழைத்திருந்தவர் தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
2004 ஆம் ஆண்டு காலை
முல்லைத்தீவின் கரையோர மக்களில் அதிகமானோர் கிறிஸ்தவ மக்கள். அவர்கள் தங்கள் நத்தார் பண்டிகையின் இயேசு பாலனின் பிறப்பின் முதற்சூரிய உதயத்தை அன்று கண்டனர். காலை பூசைக்காக தேவாலயங்களில் கூடியிருந்தனர். ஏனைய மக்கள் தங்கள் வழமையான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். திடீரென கடல் நீர் உள்வருவதை கண்டு பயந்து ஓடினோம் என அன்றைய நாளில் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் இயந்திரத் திருத்துனர் ஒருவர்.
விரைவாக முல்லைத்தீவு நகரை விட்டு வெளியேறி திருகோணமலை வீதியின் வழியே செம்மலை நோக்கிச்சென்று எதிர்ப்பட்ட எல்லோருக்கும் கடல் உள்வருவதைச் சொல்லிக்கொண்டு சென்றேன். அதிகமான மக்களுக்கு தகவலை சொல்லிவிட்டேன் என்ற மனத்திருப்தி இன்றும் தனக்கிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்று நான் இந்தளவு அழிவை இது ஏற்படுத்தும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என ஆழிப்பேரலை ஏற்படுத்திய இழப்புக்களை எண்ணி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தன்னுடைய பல நண்பர்களை அந்த ஆழிப்பேரலை கொண்டு போய்விட்டது என கண்கலங்க தெரிவித்துள்ளார்.
காலையில் பேருந்தில் தன் மகள் முல்லைத்தீவு உண்ணாப்பிலவு வைத்தியசாலைக்கு சென்றிருந்தாள். கடல் உள்ளே வந்தது என்று சொன்ன போது அவள் என்னபாடோ என்று எனக்கு ஒரே பதற்றம்.
எங்கள் ஊரில் இருந்த மக்கள் எல்லாம் முள்ளியவளை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.நானும் அவர்களோடு சென்றேன். என்னால் முல்லைத்தீவுக்கு போக முடியவில்லை. விரைவாக செயற்பட்டிருந்த வைத்தியசாலையினர் என் மகளையும் முள்ளியவளை கூட்டி வந்திருந்தனர். அவளை நான் முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியில் வைத்து கண்டுகொண்டேன். அங்கு தான் சுனாமியில் இறந்தவர்களையும் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டுவந்தவர்களையும் வைத்திருந்தனர். மகளை கண்ட பின் தான் நான் ஆறுதலானேன் என ஒரு வயதான அம்மா தன் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
சுனாமியினால் இறந்தவர்
இறந்தவர்கள் முள்ளியவளை கயட்டைக்காட்டிலும், புதுக்குடியிருப்பு ஐயனார் கோவிலுக்கு அண்மையிலும் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். முள்ளியவளையில் “சுனாமி நினைவிடம் முள்ளியவளை” என பெயரிடப்பட்டு நினைவாலயம் பராமரிக்கப்படு வருகின்றமையை அவதானிக்கலாம்.
ஆறு நீண்ட குழிகளில் இறந்தவர்களை அடக்கம் செய்துள்ளனர். ஒரு குழியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை ஒரேயடியாக வைத்து அடக்கம் செய்ய நேரிட்டதாக கூறுகின்றார். அன்றைய நாளில் இறந்தவர்களை இனம் காண்பதிலும் உடல்களை அடக்கம் செய்வதிலும் பங்கெடுத்திருந்த போராளியாகள் இருக்கின்றவர். சிலர் தங்கள் உறவினர்களின் உடல்களை தங்களுக்கான மயானங்களில் தங்கள் சமய முறைப்படி அடக்கம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் கட்டப்பட்டு அதன் மீது அவர்களது புகைப்படங்களோடு பெயர்கள் பொறித்து சுனாமியில் இறந்தவர்கள் என்பதை அறியும் பொருட்டு வாசகங்களையும் பொறித்துள்ளமையை மாமூலை,கள்ளப்பாடு சவுக்காலைகளில் காணலாம். ஒவ்வொரு சுனாமி நாளன்றும் நினைவு நிகழ்வுகள் நடைபெறுவது வழமையான ஒரு செயற்பாடாக முல்லைத்தீவு மக்களிடம் இருக்கின்றது.
முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம்
முல்லைத்தீவு நகரில் கடற்கரையில் பீட்டர் தேவாலயம் உள்ளது. சுனாமியினால் இந்த தேவாலயத்தின் முன்வளைவும் மணிக்கோபுரமும் சேதமடையவில்லை. தேவாலயத்தின் ஏனைய பகுதிகள் இடிந்துபோய்விட்டன.
பங்குத்தந்தைகளின் முயற்சியால் தனவந்தர்களின் அர்ப்பணிப்பால் அந்த ஆலயம் மீளவும் கட்டப்பட்டு சுனாமி நினைவாலயமாக பேணப்பட்டு வருகின்றதாக முல்லைத்தீவு கடற்கரையோர மக்கள் குறிப்பிடுகின்றனர்.
பங்காற்றியவர்களின் பெயர் விபரங்கள் தாங்கிய தூண்களும் அந்த நினைவாலயத்தில் இருப்பதை அவதானிக்கலாம். பீட்டர் தேவாலயத்தில் உள்ள தாங்கு தூண்களில் இறந்தவர்களின் பெயர்களை அவர்களின் வாழிடத்தை குறிப்பிட்டு நேர்த்தியான முறையில் பதிவு செய்து வைத்துள்ளமையை அவதானிக்கலாம்.
இந்த முயற்சியினால் சுனாமியில் இறந்து உடல் எடுக்க முடியாத தன் தங்கையை நினைவு கொள்ளும் ஒரு இடமாக இந்த நினைவாலயத்திற்கு வந்து போவதாக புதுக்குடியிருப்பில் தற்போது வசித்து வரும் அண்ணா தன் தங்கையின் நினைவு நாள் பற்றி கூறியிருந்தார்.
பீட்டர் ஆலயத்தின் பங்குத் தந்தையாக இருந்து பின்னாளில் நோயினால் இறந்த ஜேம்ஸ் பாதரின் சிலையும் பீட்டர் தேவாலயத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளின் படையணிகளின் செயற்பாடுகள்
முல்லைத்தீவு சுனாமியின் போது மீட்புப்பணியிலும், சுனாமியின் பின்னர் முல்லைத்தீவு நகரை இயல்புக்கு மீட்டெடுக்கும் முயற்சியிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் படையணிகள் ஈடுபட்டதாக கூறுகின்றனர். அந்த பணிகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் போராளிகள் சிலர். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி,ஜெயந்தன் படையணி, புலனாய்வு படையணி, கடற்புலி படையணி என்பன கூட்டிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாக கடற்புலி முன்னாள் போராளி ஒருவர் குறிப்பிட்டார்.
கடற்புலிகளின் சிறப்புத்தளபதியாக இருந்த சூசை அண்ணா நேரடியாக அந்த மீட்புப்பணியை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தியிருந்தார். இதன்போது விரைவான மீட்புப் பணிக்காக மக்களும், போராளிகளும் இணைந்து செயற்பட்டிருந்தார்கள். சுனாமி தாக்கியபோது பொழுது முல்லைத்தீவு நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திலுள்ள ஒரு பகுதியாக இருந்தது என்பதை நோக்க வேண்டும்.
விழித்துக்கொள்ளாத குழந்தை
தற்போது உள்ள முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கும் முல்லைத்தீவு நகரின் மத்தியில் உள்ள வட்டப்பாதைக்கும் இடையில் உள்ள பாதையில் இடுப்பளவுக்கு கடல் நீர் குறுக்கறுத்து பாய்ந்தவாறு இருந்தது.
நீரில் சிக்குண்டவர்களை மீட்டெடுக்கும் பணியில் சுனாமி தாக்கிய நாளில் காலை முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கண்டு கதைக்க முடிந்தது.
நகரின் மத்தியில் இருந்து மக்களை நீருக்குள்ளால் அழைத்து வந்து மருத்துவர்களிடமும் மீட்டெடுத்தோரை பாதுகாப்பாக கொண்டு செல்ல நின்றவர்களிடமும் கொண்டு போய்ச்சேர்க்க வேண்டியது தங்கள் பொறுப்பாக இருந்தது.
ஆண் போராளிகளும், பெண் போராளிகளும் பொது மக்களுமாக பலர் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தோம். கடல் நீரால் அலைக்கழிக்கப்பட்டிருந்த பலர் சோர்ந்து போயிருந்தனர்.பாதையில் வழி மாறாமல் இருப்பதற்காக கயிறு கட்டப்பட்டிருந்தது.
அந்த கயிற்றை அடையாளமாக வைத்துக்கொண்டு மக்களை தாங்கியவாறு நடக்க வேண்டும். அப்படி நடக்கும் போது ஒருவரை ஒருவர் தாங்கி நடப்பார்கள். பாதை மாறி விடவே நீருக்குள் சறுக்கி சிலர் விழுந்து விடுவார்கள். தம்மோடு வருபவர்களை கரை கொண்டுபோய் விட்டு திரும்பி வந்து விழுந்தவர்களைப் பார்த்தால் அவர்களில் பலர் இறந்திருப்பார்கள்.
உடல்களை மீட்டெடுத்து கொண்டு செல்ல வேண்டும். சிலரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. வாங்கும் போது உயிரோடு இருக்கும் குழந்தைகளை 500 மீற்றர் தூரம் தூக்கிச்செல்ல வேண்டும். வைத்தியர்களிடம் கொண்டு சேர்க்கும் போது பலர் இறந்திருப்பார்கள் என தன் அன்றைய நாள் அனுபவங்களை பகிர்ந்தார்.
அப்படி வாங்கிய ஒரு கிராம சேவகரின் மகள் அப்போது கைக்குழந்தை. தடித்த துணியால் அணைக்கப்பட்டு அவளது தந்தை வைத்திருந்தார். நீருக்குள்ளால் அவர்களை அழைத்துச்செல்லும் போது குழந்தையை தான் வாங்கிக்கொள்ள கிராம சேவகரான தந்தை தன்னில் சாய்ந்து கொண்டு நடந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
வாங்கும் போதும் சரி கரையேறி கொடுக்கும் போதும் சரி அந்த குழந்தை நித்திரையில் இருந்து எழுந்து கொள்ளவில்லை என ஆச்சரியப்பட்டதோடு அந்த சுனாமியின் கோரத்தில் சிக்கி வலி சுமந்த போதும் அந்த வலியிலும் குழந்தையை அரவணைத்து வைத்திருந்த அந்த தந்தையை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது என்று வியந்திருந்தார்.
வலி தந்த சுனாமி
சுனாமியை அடுத்து மூன்று நாட்களும் மேலாக அந்த நிலத்தை தூய்மைப்படுத்த வேண்டியிருந்தது. இறந்தவர்களது உடல்களை தேடி எடுத்துக்க வேண்டும். தேடி எடுத்த இறந்திருந்த பலரின் தலைமுடிகள் வேலிக் கம்பியில் சிக்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது. கடற்கரையோர கிணறுகளை தூக்கி மண் மீது போட்டிருந்தது. மலசல கூடங்கள் இருந்த இடத்திலிருந்து தூர அப்படியே சேதமில்லாது நகர்த்தியிருந்தது.
சுனாமியின் பாதிப்பை அது ஏற்படுத்திய வலியை ஈழத்து கவிஞர்கள் பாடல்களாக பதிவு செய்திருக்கின்றனர். அதனை தமிழீழ விடுதலைப் புலிகளின் இசைத் துறையினர் இசைத் தட்டுக்களாக வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கள இனவாத அரசியலை அம்பலப்படுத்திய சுனாமி
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினதும் – சிறிலங்கா சனாதிபதி திருமதி சந்திரிகா அம்மையார் அவர்களினதும் தலைமைத்துவ ஆற்றல்களையும், குணவியல்புகளையும் ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும் ஒரு அளவுகோலாக சுனாமி அனர்த்தத்திற்குப் பின்னான அவர்களின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் எடைபோட்டுப் பார்க்கின்றது.
அந்தப் பேரழிவில் சிக்கி உயிரிழந்த தமிழ் – முஸ்லிம் – சிங்கள மக்கள் அனைவர்க்கும் அனுதாபம் தெரிவித்து தலைவர் பிரபாகரன் அறிக்கை விட்டதிலிருந்து, நிவாரண உதவிகள் இன பேதமில்லாமல் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று பாதிக்கப்பட்ட எல்லோர்க்கும் ஆதரவாக பொதுவாகக் குரல்கொடுத்து உன்னத மனிதாபிமான நிலைப்பாட்டை அவர் எடுத்திருந்தார்.
அலை அடித்து ஓய்ந்த உடனே, மிக விரைவாக, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொறுப்புணர்வுடன் செயற்திறமை காட்டியது, இந்தப் பிராந்தியத்திலேயே புலிகள் இயக்கம்தான் என்பது இன்று ஒரு பொதுவான கருத்தாகிவிட்டது.
சந்திரிகா அம்மையாரும், சிங்கள உறுமய கட்சியினரும் இதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அந்த உண்மை ஏகமனதாக உணரப்பட்டுள்ளது.
புலிகள் இயக்கத்தின் கடற்புலி வீரர்களை, காவல்துறை உறுப்பினர்களை, போராளிகளை மற்றும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் உள்ளிட்ட மனிதநேய உதவி அமைப்புகளின் தொண்டர்களை உடனடியாகவே களமிறங்கி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
விளைவு! வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களே வியந்து – பாராட்டும் அளவுக்கு ஒரு அற்புதமான இடர்கால மீட்புப்பணியை புலிகள் இயக்கம் செவ்வனே நிறைவேற்றியுள்ளது. உயிர் ஆபத்திற்குள்ளும் தங்களை மீட்கவந்த புலிவீரர்களை அந்த மக்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றனர்.
யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சிங்களப் படையினர் குறுக்கிட்டு, குழப்பங்களை விளைவித்தபோதும் பொறுமைகாத்து மக்கள் பணியாற்றும்படி தலைவர் போராளிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
சில இடங்களில் அலைநீரில் சிக்கிய சிங்களப் படையாட்களை மீட்டு இராணுவத்திடமே ஒப்படைத்த சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. அதேசமயம், கிழக்கு மாகாணத்தில் இனபேதம் காட்டாமல் பாதிக்கப்பட்ட அனைத்துச்சமூக மக்களுக்கும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நிவாரண உதவிகளை வழங்கி தலைவரின் மனிதாபிமான நிலைப்பாட்டை – நிறைவேற்றிச் செயற்பட்டது.
கிளிநொச்சி வந்து தலைவர் பிரபாகரனைச் சந்தித்த நோர்வே வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழுவினருடனும் இனபேதமற்ற தனது மனிதாபிமான நிலைப்பாட்டையே தலைவர் முன் வைத்திருந்தார். அத்துடன் அனர்த்த முகாமைத்துவத்துடன் சமாதான முயற்சிகளையும் இணைத்துச் செயற்படுத்துவதே சிறந்தது என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.
சுனாமி அனர்த்தத்திற்குள் சிங்கள அரசைப்போன்று இனரீதியான அரசியலைப் புகுத்தும் சிறுமைத் தனத்தை புலிகள் இயக்கம் செய்யவில்லை.
பெருந்தொகைப் படையினர் இயற்கைச் சீற்றத்தில் பலியாகியிருந்த போதும் – அதைப் பிரச்சாரப்படுத்தி குதூகலிக்கும் நாகரீகமற்ற அரசியலை புலிகள் இயக்கம் செய்யவில்லை.
அத்துடன் அழிவடைந்த பகுதிகளைப் பார்வையிடவந்த உலகத்தலைவர்களை முல்லைத்தீவு செல்லவிடாது தடுத்து அவர்களைச் சங்கடப்படுத்திய சிங்கள அரசின் இனவாதச் செயற்பாட்டை பெரிய விடயமாக எடுத்து அந்த உலகத் தலைவர்களை மேலும் சங்கடத்துக்குள்ளாக்காமல் அரசியல் நாகரீகத்துடன் புலிகள் இயக்கம் நடந்துகொண்டது.
இதேவேளை, கடந்த வருடம் தென்னிலங்கையில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சிங்கள மக்கள் பெரும் பாதிப்படைந்தபோது அங்கே நிவாரணப் பொருட்களுடன் சென்ற புலிகள் இயக்கம் சிங்கள மக்களுக்கு உதவிய மனிதாபிமான செயற்பாட்டையும் உலகம் அவதானித்தபடியே இருந்தது.
இவ்விதமாக, தேவை ஏற்படும்போதும், தேசிய அளவில் நெருக்கடிகள் ஏற்படும்போதெல்லாம் புலிகள் இயக்கம் அரசியல் நாகரீகத்தையும் – மனிதாபிமான நிலைப்பாட்டையும் கடைப்பிடித்தபடி பண்பாக நடந்துகொண்டதை உலகசமூகம் அறியும்.
இவையெல்லாம் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அபாரமான தலைமைத்துவ ஆளுமையினதும், சீரிய உயர் பண்புகளினதும் அரசியல் வெளிப்பாடுகளே என்பதை உலக சமூகம் எடைபோட்டிருந்தன.
ஆனால், சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா அம்மையாரோ இதற்கு முரணானதொரு அரசியல் செயற்பாட்டையே இந்த இடர்கால நெருக்கடி வேளையிலும் நடாத்தி வருகின்றார்.
அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உடனடி மீட்பு நடவடிக்கைகளை அரசு சரியாக நடாத்தியிருக்கவில்லை என்று ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
அரச தலைவியின் ஆளுமையின்மையும், அதன் விளைவான அரச இயந்திரத்தின் அசமந்தப்போக்குமே இந்த செயற்திறனின்மைக்கு முக்கிய காரணங்கள் என்பது உலக ஊடகங்களின் கருத்தாகும்.
அம்பாறை மாவட்டத்தின் அரச அதிபராக உள்ள சிங்கள அதிகாரி அனர்த்தம் நடந்தும் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்கவில்லை. அம்பாறையில் சிங்கள மக்கள் பாதிக்கப்படவில்லை என்பதே அவரின் இந்த புறக்கணிப்புக்குக் காரணம். இது தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடுமையான அழுத்தத்தின் விளைவாக முஸ்லிம் அதிகாரி ஒருவர் அம்பாறையின் மேலதிக அரச அதிபராக நியமிக்கப்பட்டார். அவரின் தலைமையிலேயே
அம்பாறையில் அரச இயந்திரத்தின் இடர்காலப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்தகையதொரு தேசிய அனர்த்தவேளையிலும் ஒரு சிங்கள அதிகாரி மனிதாபிமானமில்லாமல் தனது இனவெறி உணர்வை செயலில் காட்டியிருந்தபோதும் அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் சந்திரிகா அம்மையார் எடுக்கவில்லை. இது அம்மையாரின் இனவெறி உணர்வையே வெளிப்படுத்துகின்றது என்பதே உண்மையாகும்.
திருகோணமலை மாவட்டத்திலும் இதே நிலைமைதான் இருந்தது. அரச நிவாரணங்கள் இனரீதியாக வரையறுத்து – பாகுபாடாகவே நடந்தன. தமிழ்மக்களுக்குச் சென்ற நிவாரணப் பொருட்கள் படையினராலும் – ஜே.வி.பியினராலும் – சிங்களக் காடையர்களாலும் வழிமறிக்கப்பட்டு திசைதிருப்பப்பட்டன. இத்தகைய குற்றச் செயல்களுக்கும் எந்தவித சட்ட நடவடிக்கைகளையும் அம்மையாரின் அரசு எடுக்கவில்லை.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளை அண்மித்திருந்த சிங்கள மக்கள் இந்த மீட்பு நடவடிக்கைகளிலும் – நிவாரண முயற்சிகளிலும் மனிதாபிமானமாக நடந்துகொண்டனர் என்பதும் முக்கிய செய்திகளாகும்.
இலங்கைத்தீவை சுனாமி தாக்கியபோது தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு மாநிலங்களே பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த உண்மையைக்கூட ஏற்கமறுத்த அம்மையார் தென்னிலங்கைதான் அதிகம் பாதிப்படைந்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
உலகநாடுகள் வழங்கிய உதவிப் பொருட்களைக்கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமமாகப் பிரித்தளிக்க அவர் தவறிவிட்டார். இந்த இயற்கை அனர்த்தவேளையிலும் சிங்களவர் – தமிழர் என்று பிரித்துப் பார்த்து தனது இனவாதச் செயற்பாட்டையே காட்டியுள்ளார்.
முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருந்தும் – இலட்சக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்திருந்தும் – பில்லியன் ரூபா சொத்தழிவு ஏற்பட்டிருந்த இந்த துயர நேரத்திலும் அம்மையார் அவர்கள் புலிகள் இயக்கத்திற்கு ஏற்பட்ட இழப்புகளை மிகைப்படுத்தி – மகிழ்ச்சி தெரிவித்து – கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தார்.
தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் – கடற்புலிகள் அழிந்து விட்டனர் என்று தமது பேரினவாத ஆசைகளை வெளிப்படுத்தி – கேவலமான அரசியலையே சிங்கள அரசு நடாத்திக்கொண்டிருந்தது.
உலகநாடுகளின் நிதி உதவியுடன் 15 நகரங்களை புனரமைக்கப் போவதாக சந்திரிகா அம்மையார் அறிவித்திருந்தார். அதில் ஒன்றுகூட முல்லைத்தீவு மாவட்டத்திற்கோ – யாழ்ப்பாண மாவட்டத்திற்கோ ஒதுக்கப்படவில்லை.
மனிதாபிமானப் பயணம் மேற்கொண்ட உலகத் தலைவர்களை வன்னிப்பகுதிக்கு வரவிடாமல் தடுத்து அநாகரீக அரசியலையே அம்மையார் நடாத்தியுள்ளார்.
இவையெல்லாவற்றையும் உலகசமூகம் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கின்றது. இத்தகைய காட்டுமிராண்டி மனநிலையுடன் இருக்கும் ஒரு ஆட்சிப்பீடத்திடமிருந்து தமிழ்மக்கள் எவ்வாறு அரசியல் உரிமைகளை அமைதிவழியில் பெற முடியும்!? என்று உலகசமூகம் உணர்ந்திருக்கும்.
ஒருபுறத்தில் தேசிய ஆளுமையையும் – செயல்திறமையையும் கொண்ட ஒரு தலைமை செயற்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை இன்னொரு புறத்தில் இனவெறி உணர்வையும் – சோம்பேறித் தனத்தையும் கொண்டதொரு அரைகுறைத் தலைமை இலங்கைத்தீவில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற உண்மையை உலகசமூகம் அவதானித்தபடி உள்ளது.
இந்தோனேசிய சுமாத்திராத் தீவின் வடமேல் ஆழ்கடலில் ஏற்பட்ட புவினடுக்கத்தினால் பொங்கியெழுந்த பேரலை இந்து சமுத்திரத்தின் கரையோரப் பிரதேசங்களை தாக்கியது.
தெற்கு தென்கிழக்காசிய நாடுகளை தாக்கிய இப்ப பேரலை 250676-ற்கு மேற்பட்டோரை காவு கொண்டதோடு மிகப் பெரும் பொருள் அழிவையும் ஏற்படுத்தியது.
இந்தோனேசியாவில் 184135-ற்கு மேற்பட்ட உயிரழிவுகள் ஏற்பட்டன.
தெற்கு தென்கிழக்காசிய நாடுகளை தாக்கிய இப்ப பேரலை 250676-ற்கு மேற்பட்டோரை காவு கொண்டதோடு மிகப் பெரும் பொருள் அழிவையும் ஏற்படுத்தியது. இலங்கைத்தீவில் தமிழீழப் பிரதேசங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தோர் 38195-ற்கு மேற்பட்டோர் சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்..
மாவட்ட ரீதியாக-
யாழ்ப்பாணம்: 1256
முல்லைத்தீவு: 2902
கிளிநொச்சி: 32
திருகோணமலை: 984
மட்டக்களப்பு: 2975
உலகையே உலுக்கிய இச் சோக வரலாற்றால் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் நிவாரணங்களை நேரடியாக அனுப்பி வைத்து. சிங்களப் பேரினவாதம் இச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களுக்கு நிவாரணங்கள் முழுமையாக கிடைக்காமல் தடை ஏற்படுத்தியதோடு, உலகத்தலைவர்கள் நேரில் சென்று பார்ப்பதற்கும் தடை விதித்தது.
ஆழிப் பேரலை புகட்டிய பாடம் எமக்கு நாம் தான் என்பதே!
பெரும்பகுதி கடலால் சூழப்பட்ட தமிழர் தாயகத்தில் ஆழிப் பேரலையினால் ஏற்பட்ட அழிவு பேரழிவு தான். இந்த இயற்கை அனர்த்தம் பற்றி புத்தாயிரமாம் ஆண்டில் புதிய மனித சமூகம் நன்கறிந்துள்ளது. தமிழரைப் பொறுத்தவரையில் உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்றவர்கள் ஆகையால் ஆழிப்பேரலை பற்றிய அறிவியல் ரீதியான தேடலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதே எமது மக்களை எதிர்காலத்தில் காப்பாற்றுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய முடியும்.
ஆழிப் பேரலை ஊழித் தாண்டவமாடி எமதுறவுகளைக் காவு கொண்டு ஜந்தாண்டுகள் கடந்த நிலையிலும் பேரழிவைக் கண்ட எமது மக்களிற்கு உலக சமூகம் அனுப்பிய முழுமையான உதவிகள் சென்றடையாமலே போனதை வெளி உலகம் நன்கறிந்தும் அது பற்றி அக்கறையாக நியாயக் குரல் எழுப்பவில்லை.
நெடுங்காலப் போரின் வலியைச் சுமந்த மக்களிற்கு 2002 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சிறு ஆறுதல் கிடைத்திருந்த வேளையில்தான் இயற்கைப் பேரழிவும் ஏற்பட்டது. 26.12.2004 அன்று தமிழர் தாயகத்தின் மாதகல் தொடக்கம் அம்பாறை உகந்தை வரையிலும் குறுகிய நேர இடைவெளிக்குள் பேரழிவு ஏற்பட்டது. போரினால் தொடரழிவுகளைச் சந்தித்தவர்கள் இயற்கையின் அழிவுகளாலும் உடைந்து போனார்கள்.
ஏன் இப்படிக் கொடுமை நிகழ்ந்ததென மனம் பேதலித்து அங்கலாய்த்தவர்களின் மீள் வாழ்விற்கு உலக சமூகம் வழங்கிய உதவிகளையும் சிறி லங்காப் பேரினவாத அரசாங்கம் தடுத்தது. இயற்கை அழிவுகளையும் தனது தமிழின அழிவிற்கான ஒரு பகுதி வேலையாகவே சிறி லங்கா அரசாங்கம் நோக்கியது. அத்தகைய, நோக்கத்துடன் தான் துயர் மிகுந்த அந்த வேளையிலும் கூட தலைவர் பிரபாகரன் ஆழிப் பேரலையில் சிக்குண்டார் என்றெல்லாம் பொய்ப் பரப்புரைகளைச் செய்தது. இப்படியான கொடுமையான சிந்தனை காலியில் நடந்த ஒரு சம்பவத்துடன் ஒப்பிடக் கூடியது தான்.
சிறி லங்காவில் காலி மாவட்டமும் ஆழிப் பேரலையால் வெகுவாகப் பாதிக்கப் பட்டிருந்தது. இந்த இயற்கை அநர்த்தம் கோர தாண்டவமாடிக் கொண்டிருந்த வேளை அதற்குள் சிக்குண்ட இளம்பெண் ஒருவர் உயிரிற்காகப் போராடிக் கொண்டிருந்தார். அந்த இளம் பெண்ணைக் காப்பாற்றுவது போல பாசாங்கு செய்த ஒருவர் அவரைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினார். (இது நடந்தது சிங்கள தேசத்தில். சிங்கள அளம் பெண்ணிற்கு, சிங்கள நபரால்) அது போன்ற கொடுமையான சிந்தனையோடு தான் தமிழரைச் சிங்களப் பேரினவாதிகள் நோக்கினார்கள்.
தளபதிகளும் போராளிகளும் பாதிக்கப்பட்ட எமது மக்களிற்குத் தாராளமாகவே உதவினார்கள். சிறி லங்கா அரசாங்கமோ ~மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்க, மாடேறி மிதித்தவன் மேல் மரத்தைத் தறித்து வீழ்த்துவதற்கு| ஒப்பான காழ்ப்புணர்வு கொண்ட வேலைகளையே செய்தது. இதில் அன்றைய சிறி லங்காவின் ஜனாதிபதியான சந்திரிகா இடையறாது அக்கறையாச் செயற்பட்டார். வெளிநாடுகளின் தலைவர்களை ஏன் ஐ.நா.வின் அன்றைய பொதுச் செயலாளர் கோபி அனானைக் கூட விடுதலைப் புலிகளின் ஆழுகைக்கு உட்பட்ட பிரதேசத்திற்குள் செல்லவிடாது தடுத்தார்.
உலகின் கண்துடைப்பிற்காக சிறி லங்கா சில உதவிகளை அனுமதித்தது. ஆனால், முழுமையான மீள்கட்டுமானத்திற்கான வேலைகளைத் தடுத்தே வந்தது. ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களை மனித நேயத்தைப் புதைத்துவிட்டு நோக்கிய சிறி லங்காவைப் பற்றி எடுத்துக் கூறினால் அதுவே ஒரு பெரும் தொடராகி விடும்.
போரினால் நெடுங்காலத் துயர் சுமந்தவர்களிற்கு ஆழிப் பேரலை பேரழிவை ஏற்படுத்தியது. ஆழிப் பேரலையினால் பாதிக்கப்பட்ட தமிழர் மீண்டும் ஆற்றப்பட முன்னரே சிறி லங்கா போரைத் தொடங்கியது. இப்பொழுது முழுமையாக தமிழினத்தைத் துவம்சம் செய்வதற்கானதாக சிறி லங்கா அரசால் மூர்க்கத்தனமாக இன ஒதுக்கல் முன்னெடுக்கப் படுகின்றது. தமிழரை அவர்களின் தாயகத்தில் முழுமையாக அழித்து விடுவதற்கான இறுதி நடவடிக்கையாக அது தமிழர்களை வதைத்து வருகின்றது. எப்படி ஆழிப் பேரலை ஏற்பட்டபோது எமக்கு நாமே என்று பணி செய்தோமோ அதே போன்றுதான் இன்றைய காலகட்டத்திலும் நாமே அவற்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலை வருவதற்கு முன்னர் தமிழர் தாயக மண்ணில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவுகள் ஏற்பட்டன. மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர். அதனை நினைவூட்டுவது போல இன்று தாயக மக்கள் மழை வெள்ளத்தால் அவதியுறுகின்றனர்.
கிளிநொச்சியில் இருந்து மடுவிற்கு, மடுவில் இருந்து மல்லாவிக்கு, மல்லாவியில் இருந்து மாங்குளத்திற்கு, மாங்குளத்தில் இருந்து முள்ளியவளைக்கு, முள்ளியவலையில் இருந்து உடையார் கட்டிற்கு என மாறி மாறி இடம் பெயர்ந்து ஈற்றில் முள்ளிவாய்க்கால் கொடும் வதையோடு துன்பக்கடலில் துயருடன் வாழும் மக்களிற்கு வெள்ளமும் பாதிப்பினையே கொடுக்கின்றது. இக் கொடுமையில் பரிதவிக்கும் எமது உறவுகளிற்கு நாம்தான் துணையாக இருக்க முடியும்.
வளம்மிக்க வன்னி மண்ணில் போர் தீவிரம் மாகி இனத்தையே காழப்படுத்தியுள்ளது இதனால் வடுக்களைச் சுமந்தபடி வாழும் மக்களின் சுயபொருளாதாரக் கட்டமைப்பும் சிதைத்துள்ளது. பச்சை மிளகாய் ஒரு கிலோ ஐநாறு ரூபாய், கத்தரிக்காய் ஒரு கிலோ முன்னூற்றி அறுபது ரூபாய், வெண்டிக்காய் ஒரு கிலோ நானூறு ரூபாய், பூசனிக்காய் ஒரு கிலோ இருநாறு ரூபாய் என என்றுமில்லாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது. கொடிய வதைமுகாம் அவலம் , மழை வெள்ளம் என மக்களின் வாழ்வு பேரவலத்திற்குள் தள்ளப் பட்டுள்ளது.
இத்தனையும் நடக்கின்ற போதும் ஈவீரக்கமின்றி அந்தமக்களை கொடுமைப்படுத்தி வருகிறது சிறி லங்கா அரசாங்கம். ஆயினும் புலத்து மக்கள் இன்னும் என்ன செய்து கொண்டுள்ளனர் என்ற கேள்வி யாரிக்கு வரவில்லை என்றாலும் அவலத்தில் வாழும் மக்களிற்கு வருவது தவிர்க்க முடியாததே. ஆனால், இப்போது வன்னியில் வாழும் மக்களை சிந்தியுங்கள் எவ்வளவு துயர்? ஆழிப் பேரலையை இந்த மாதம் 25/26 மீண்டும் நினைவு படுத்தும் நாள் நெருங்குகின்ற போதும் வன்னியின் வடுக்களைச் சுமந்தமக்களை நினைத்துப்பார்ப்போம்?
எல்லாத் துயரிற்கும் ஓர் முடிவு வேண்டுமல்லவா? எனவே எமதினம் தொடர்ந்து போராடினால் தான் முடிவையும் விடிவையும் காண முடியும். கடலடிப் பூகம்பம் கடலைத் தாண்டி ஆழிப் பேரலை வந்தது. சோறு தந்த கடலே தந்த துயரைப் பொறுக்கலாம் மன்னிக்கலாம். மீண்டும் கடலுடன் உறவாடலாம்.
குழந்தைகள் பெண்களென வயது வேறுபாடின்றி ஈழத் தமிழரை அறுபது ஆண்டுகளிற்கும் மேலாக சிங்களப் பேரினவாதிகள் அழித்தே வருகின்றனர். ஆழிப் பேரலையிலும் கொடுமையாகவே சிங்களப் பேரினவாதிகளின் கொடூர நடவடிக்கைகளை தமிழர் பார்க்கின்றனர்.
ஆழிப் பேரலையின் அழிவிற்குப் பின்னர் தனிநாட்டிற்குரிய பண்போடு எப்படிப் புலிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டார்களோ அதேபோன்று அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழரிற்காக வேறு யாரால் செயற்பட முடியும்? 2004 ஆம் ஆண்டு மீட்புப் பணியில் ஈடுபட்ட புலிகளின் பணிகளை வெளிநாடுகளில் உள்ள பல ஊடகங்களும் பாராட்டின. முல்லைத்தீவிற்கு 03 சன. 2005 அன்று அழிவுகளைப் பார்வையிட வந்த யுனிசெப் தலைமை இயக்குநர் கரோல் பெலாமி புலிகளின் மீட்புப் பணியையும் நிவாரண வழங்கலில் உள்ள திட்டமிடலையும் வெகுவாகப் பாராட்டினார்.
அமெரிக்காவில் ~சிக்காக்கோ றைபியூன|; பத்திரிகை 07.01.05 அன்று தமிழீழ நிர்வாகத் திறமையைப் பட்டியலிட்டதுடன் தனிநாட்டிற்குரிய செயற்பாடுகளைக் கொண்டதெனவும் விபரித்தது.
ஆழிப் பேரலையின் பின்னான மீள்கட்டுமான வேலைகளை நேரில் பார்த்தவர்களால் தான் புலிகளின் பணிகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. இதன் காரணமாகவே சிங்களப் பேரினவாத அரசு வெளிநாட்டவர் புலிகளின் ஆழுகைக்குள் செல்வது உண்மைகளை அறிய உதவும் என்று தடுத்தது.
எனவே, ஆழிப் பேரலையின் பின்னான செயற்பாடுகளை வைத்தும் யார் மனிதாபிமானச் செயற்பாட்டாளர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். புலம் பெயர்ந்தவர்களே பல வழிகளிலும் உதவுகின்றீர்கள். அறிவியல் ரீதியாகவும் உங்களை வளர்த்து கடலெல்லை அதிகமாக உள்ள எமது நாட்டில் ஆழிப் பேரலையால் அழிவேற்படாமல் பாதுகாப்பது பற்றியும் கவனியுங்கள்