ஈழ விடுதலைப் போரின் இறுதிக் கட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைப் பற்றிய கேள்விகளுக்கு யாதொரு தீர்மானமான பதிலையும் கூறாமல் பாசாங்கு செய்து இழுத்தடித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்திடம் பல போராட்டங்களின் ஊடாக மன்றாடிக் கொண்டிருக்கும் தாய்மார்களின் நிலையைத் தான் என்னவென்று சொல்வது. நடந்தவற்றை யாவும் நன்றாக அறிந்திருந்தும் ஊமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் உலக வல்லா திக்கங்களின் செவிட்டுச் செவிகளில் எமது தாய்மார்களின் கதறல்கள் கேட்ட பாடில்லை.
விடை தெரியாத பயணமாக தன் பிள்ளைகளின் நிலையைத் தேடி கடந்த 13 ஆண்டுகளாக ஏங்கிக் கொண்டிருக்கும் எமது தமிழ்த் தாய் மார்களின் பாசப் போராட்டத்திற்கும் அவர்களின் நெஞ்சுரத்திற்கு மேலும் உறுதியளிக்கத் தமிழீழ தாயகத்திலும், புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகளும் பல இயக்கங்கள் மூலமாகவும், குழு அமைத்தும் பல சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். அந்த வகையில் மிக வீரியமிக்க தமிழ்த் தேசிய செயற்பாட்டாளராகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான குரலாகவும், நில அபகரிப்புத் தொடர்பான மக்கள் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் களமாடிக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரர் விஜிகரன் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. தனது தாய் தந்தையர் தாயகத்திலும், தான் புலம் பெயர் தேசத்திலுமாக பிரிந்து வாழும் சூழ்நிலையிலும் தனது தமிழ்த் தேசிய செயற்பாட்டின் ஊடாக ஈழத்தில் பல மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு தன்னலமற்ற போராளியாக செய்யலாற்றிக் கொண்டிருப்பவர் அன்புச் சகோதரர் திரு. விஜிகரன் அவர்கள்.
அவரின் இந்தப் போராட்டப் பயணத்தின் நோக்கமும், அதன் தற்போதைய நிலையையும் குறித்து ஒரு செவ்வியின் மூலமாக நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இங்கு நாம் காண்போம்.
https://www.youtube.com/watch?v=LqCrQP08OFM
முழுமையான நேர்காணலைப் பார்வையிட