நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது. என்ற தேசியத் தலைவர் அர்களின் சிந்தனையுடன் ஆரம்பமான இந்நிகழ்வின் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிட ஊடகவியலாளர் திரு. நாகேஸ்வரன் குருபரன் இணைந்து கொண்டார்.
ஒரு தேசத்தின் மக்கள் மேல் 2006 தொடக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக் கொத்தாகக் இராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் மே 12ம் திகதியிலிருந்து எதிர்வரும் மே 18ஆம் திகதி வரையான காலப்பகுதி ‘முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரமாகும்.
புலம்பெயர் வாழ் ஈழப் படைப்பாளியான அறிவுச்சோலை நிலவனின் ‘ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 – பாகம்- 01 ‘ கட்டுரைத் தொகுப்பு நூல் சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழர் கலறி மண்டபத்தில் நிதர்சனம் நிறுவனத்தினால் 14.05.2022 சனிக்கிழமை மாலை 02:00 மணிக்கு வெளியிட்டு வைக்கப்பட்டது.
உலகவல்லாதிக்க நாடுகளின் ஒட்டுமொத்த ஆதரவோடு, தமிழர் தாயக தேசத்தில் பௌத்த சிங்கள பேரினவாத அரசு, சுதந்திரத்திற்காய் எழுந்த குரல்கள் பயங்கரவாதம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் சிறுமைப்படுத்தி மேற்கொண்ட சாட்சியமற்ற போரின் அழியா சாட்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் “ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 – பாகம்– 01” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்விற்கு வருகைதந்திருக்கும் அனைவரையும் நிகழ்வின் ஏற்பாட்டு குழுசார்பில் வரவேற்றுக் கொண்டார்.
பௌத்த சிங்கள பேரினவாத அரச ஆட்சி பீடங்கள் உலக வல்லரசுகளின் துணையுடன் திட்டமிட்டு நிகழ்தப்பட்ட தமிழினப்படுகொலைகளின் கொடூரங்கள். ஒடுங்கிய நிலப் பரப்பில் போர் வெறியர்களின், அகோரத்தாண்டவம் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை இருப்பிடமின்றி, உணவு, மருத்து வசதிகளின்றி பாதுகாப்பு வலயங்கள், படுகொலைக் களம் ஆகிட தொடர்ச்சியான விமான குண்டு வீச்சுக்கள் எறிகணைத்தாக்குதல்கள், கொத்துக்குண்டுத் தாக்குதல்கள், இரசாயண எரிகுண்டுத் தாக்குதல்கள் எனச் சிங்கள அரச படைகளினால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட 21ம் நூற்றாண்டின் அதியுச்ச இன அழிப்பின் (Tamils Genocide) சாட்சிகளாய் கண்ணீர் சிந்திய நாட்களை கண்முன் கொண்டு வருகின்றது. தமிழினப்படுகொலைகளின் வரலாறு திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில், நினைவுகளை அடைகாத்து உலகத் தமிழரின் மனச்சாட்சியின் முன் ஆவணத்தொகுப்பாக கொண்டுவந்திருக்கும் ‘ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 பாகம் 01 என்னும் இந் நூல் வெளியீட்டு நிகழ்விற்குள் செல்வோம் என ஆரம்பித்தார் தொகுப்பாளர்.
தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் சிந்தனையோடு நிகழ்வு ஆரம்பமானது தொடர்ந்து தமிழீழ தாயக மண்ணின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களையும் – ஆக்கிரமிப்பு படைகளால் கொல்லப்பட்ட அப்பாவித்தமிழ் மக்களையும் – குறிப்பாக 13 ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பு செய்யப்பட்ட தமிழ்மக்களையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடரை மூத்த போராளி திரு. காந்தன், சுவிஸ் சைவ நெறிக்கூட இணைப்பாளர், திரு. சிவருசி சசிக்குமார் ஐயா, சைவ நெறிக்கூட உறுப்பினர் திரு. கீர்த்தி. ஆகியோர் ஏற்றிவைத்தார்கள்.
அகவணக்கம் – ‘தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களையும் சிறிலங்கா இந்தியப் படைகளாலும் இரண்டகர்களாலும் படுகொலைசெய்யப்பட்ட மக்களையும், நாட்டுப்பாற்றாளர்களையும், மாமனிதர்களையும், நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்துவோமாக…’ பின்னர் நிறைவு செய்து கொள்வோம். எனக் கூறி நிறைவுசெய்தார்.
தாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடிய இனவழிப்பு போரின் உச்சமாக – சிறிலங்கா அரசால் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை நெஞ்சினில் இருத்தி, அவர்களுக்காக நினைவுத்தீபத்தை முள்ளிவாய்க்கால் மண்ணில் வாழ்ந்து மண்ணின் வலிகளை சுமந்து, இன்று புலம்பெயர்ந்து வாழும் அரசியல்துறையினைச் சேர்ந்த திரு. தயாமோகன், போராளிகள் கட்டமைப்பைச் சேர்ந்த திரு. திலகன் , அக்கினிப் பறவைகள் இளையோர் அமைப்பு சேர்ந்த திரு. யதுராம், தழிழர் ஒருங்கினைப்புக் குழு – லவுசான் மாநில முன்னாள் செயற்பாட்டாளர் திரு.வேலுப்பிள்ளை மகாதேவன் – ஆகியோர் ஏற்றிவைத்தார்கள்.
தமிழர் தாயகத்தில் தமிழர்களின் மொழி, நிலம் சார்ந்த அடையாளங்களை அழித்து, அபகரிக்கப்பட்ட நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை திட்டமிட்டு உருவாக்கியும் சிங்கள அடையாளங்களை நிறுவிட வேலை திட்டங்களையும் அரசு தீவிரப்படுத்திட மாவிலாறில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற இந்த இன அழிப்புப் போரில் ஈழ மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமைகள் நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு பயங்கரமானது.
மானுட வரலாற்றில் தமிழர்மிது சிங்கள தேசம அரங்கேற்றிய மிகப்பெரும் இன அழிப்பின் ஆறாவடுக்களைக் கனதியான நினைவுகளோடு கடக்கின்ற ஒவ்வொரு நாட்களும் முள்ளிவாய்க்காலில் இருந்தவர்களுக்கு மட்டுமன்றி, உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களுக்கும் இதுவொரு ஆறாத வலிதரும் நினைவுகள். எமது போராட்டத்தின் விழுதுகள் வீழுதெறிந்த களம் உலக வல்லரசுகளும் இந்தப் போக்கை உறுதிப்படுத்த விளைகிறார்கள். முள்ளிவாய்க்காலில் இருந்து தொடர்ந்து பயணிப்பதற்கான உத்திகளின் அடிப்படையிலேயே தமிழர்கள் பயணிக்க வேண்டும்.
முள்ளிவாய்க்காலைக் கருவியாகக் கொண்டு முன்னேற முயல வேண்டுமென்ற நினைவுகளுடன் மலர் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுதிட இன அழிப்பு -இனப்படுகொலையின் வாழும் சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் திருகோணமலை மாவட்ட தளபதிகளில் ஒருவரான மாவீரர் வசந்தன் அவர்களின் துனைவியரான வசந்தன் கோகிலம் அவர்கள் மலர்மாலை அணிவித்து ஆரம்பித்துவைத்திட அவருடன் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தீபம் ஏற்றி மலரஞ்சலி செய்தார்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இயங்கு விசையாக உலகத் தமிழர்களை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் தமிழினப் படுகொலைக்கான நீதி கேட்கும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக புலம்பெயர் வாழ் ஈழத்தமிழ் படைப்பாளி அறிவுச்சோலை நிலவன் எழுத்தில் நிதர்சனம் நிறுவனம் வெளியிடும் ‘ஈழப்படுகொலையின் சுவடுகள்2009 பாகம் 01 நூல் வெளியீட்டு நிகழ்வுக்காக வருகைதந்திருந்த பேச்சாளர்கள், செயற்பாட்டளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர்கள், இலக்கிய படைப்பாளர்கள் உட்பட அனைவருக்கும் நிதர்சனம் குழுமம் சார்பாக மாவீரர் தளபதி வசந்தன் அவர்களின் புதல்வி இலக்கியா வசந்தன் அவர்கள் வரவேற்புரையினை நிகழ்த்தினார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள், தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள். ஏன்ற தேசியத் தலைவர் அர்களின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்த மாவீரர்களுக்கு உகலத் தமிழர்களின் பாராட்டினை பெற்ற தழிழீழ எழுச்சிப் பாடர் திரு சந்திரமோகன் மாவீரர் பாடல் பாடியிருந்தார்.
இலங்கைத்தீவில் பரந்துவிரிந்த கொடிய போரில், வாழ்வதற்காய் போராடவேண்டிய ஒருவரலாற்றுக் கட்டத்தில், எமது தமிழினம் சந்தித்த சவால்களும் அழிவுகளும் பெரியவை. பேரழிவின் இனப்படுகொலைகள் தொடர்து இனவழிப்பின் உச்சத்தை தொட்ட முள்ளிவாய்க்கால் இன அழிப்பு படுகொலையின் 13ஆண்டுகளை கடந்த நிலையில் வலி சுமந்த முள்ளிவாய்கால் வணக்க உரையினை சுவிஸ் சைவ நெறிக்கூட இணைப்பாளர், திரு. சிவருசி சசிக்குமார் ஐயா அற்றியபோது உலகத்தமிழர்கள் ஒன்றினைய வேண்டியதன் தேவைப்பாட்டினை முக்கியத்துவத்தினையும் குறிப்பிட்டிருந்தார்.
எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை. என்ற தமிழீழ தேசியத் தலைவர் அர்களின் சிந்தனைக்கு அமைவாக ‘சாத்வீக நடனாலய’ நடனப் பள்ளி திருமதி மீனா பிரகாஸ் ஆசிரியரின் நெறியாழ்கையில் நடன ஆற்றுகை நிகழ்வினை – செல்விகள் கொலம்பஸ் பிரவின்சியா, தேவராஜா திவ்யா, சசிதரன் அஞ்சலி, டொமினிக் ரொசானா, விஜயகுமார் விதுசா ஆகிய மாணவிகள் வழங்கினார்கள்.
வலிசுமந்த மாதத்தின் கனத்த நினைவுகளோடு நிகழ்வுக்கான தலைமை உரையினை வழங்கிய கவிஞரும் எழுத்தாளருமான திரு கணபதிப்பிள்ளை கேதீஸ்வரன் அவர்கள் நூல் பற்றியும், தமிழர் வரலாறு, அவற்றினை ஆவணப்படுத்த வேண்டியதன் முக்கித்துவம், என இந் நூல் வெளியீட்டின் தேவைபற்றியும் , தனது தலைமை உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அறம் சார்ந்த வீரம், அதுதான் தமிழ் தேசிய இராணுவத்தின் கட்டமைப்பு, இந்த உலகத்தில் எந்த இராணுவ வீரர்களுக்கும் இல்லாத ஒழுக்கம், தமிழ் தேசிய இராணுவத்திற்கு மட்டும்தான் உண்டு. இதற்காக தமிழர்கள் ஒவ்வொருவரும் கர்வப்பட்டுக் கொள்ளலாம். தமிழ் தேசிய இராணுவத்தை எமது தேசிய தலைவர் அறம் வழி நின்று கட்டியமைத்தார். அறத்தோடுத்தான் மறவர்களை உருவாக்கினார்.
பிராந்திய, மேற்குலக வல்லரசுகளின் சூழ்ச்சியினால் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர்கள் கட்டியெழுப்பிய பெரும் படைச் சாம்ராஜ்யம், தமிழர் படை வல்லுனர்கள் ,படை வலு, போரிடும் ஆற்றல் நவீன தமிழர் போரியல் வரலாற்றில் ஒருசேர பெரும் ஆளணி, படைத்துறை வளங்களைக் கொண்ட தமிழர் தேசம், இன அழிப்பு படுகொலைகளின் பேரழிவுகளை இன்னும் ஏராளமான தடயங்கள் ஞாபகப்படுத்துகின்றன, ஈழப்படுகொலையின் சுவடுகளும் 2009 பாகம் 1 என்னும் நூலும் அதனை ஆவணப்படுத்திட தவறவில்லை. என்பதுடன் 2009ஆம் ஆண்டு போராளிகள் இராணுத்திடம் முழுமனதுடன் சரணடைந்தார்களா? சரணடையும் சூழலுக்குள் நிற்பந்திக்கப்பட்டார்களா? என்பது பற்றியும் சுவிஸ் நாட்டில் வாழும் ஒரு போராளியின் அனுவத்தினை குறிப்பிடுகின்றபோது, சுவிஸ்வாழ் செயற்பாட்டளர் ஒருவர் குறித்த போராளியிடம் 2009 நீங்கள் எல்லாம் ஏன் குப்பி கடிக்கவில்லை? கடித்திருக்க வேண்டியது தானே… என்ற தொற்றப்பா டில் அவரது கேள்வி அமைந்ததாகக் கூறிய போராளி அந்த நேரம் அவன் உள்ளக் குமுறலையும், குப்பி ஏன் வந்தது, அதன் தனித்துவம், போராளிகள் ஏன் இராணுவத்திடம் சரணடைய வேண்டிய சூழல் ஏற்பட்டது, என்பனவற்றை மிக ஆளமான கருத்தியலுடன் நூல் பற்றியும் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், என நூல் கொண்டுவந்துள்ள விடையங்களையும் தனது சிறப்புரையில் அரசியல்துறைப் போராளி செம்பருதி அவர்கள் கூறியிருந்தார்.
அரங்கில் அடுத்து கவிதை ஊடாக வீரம் நிறைந்த நிலத்தின் விடுதலை வீரர்களின் வரலாற்றையும் முள்ளிவாய்களும், அதன் இனப்படுகொலைகளையும் தன் கவிவரிகளில் பறைசாற்றிச் சென்ற செல்வி இலக்கியா வசந்தன் அவர்கள்.
வலி சுமந்த மக்களோடு வாழ்ந்து – அதன் வலிகளை தடுக்க தன்னால் இயன்றவரை முயன்று – அது முடியாமற்போக படையினரின் தடுப்புமுகாமில் வாழ்ந்து – உலகம் இதுவரை அறிந்திராத வலிகளை சுமந்து – ஒருவாறு தப்பிபிழைத்து வெளியேறி – இனி இருந்தாலும் இந்த மண்ணில் இன அடக்கு முறை வாழவிடாது என்ற நிலையில் – வெளியேறி சுவிசிலாந்தில் வாழ்ந்துவரும் தழிழீழ எழுச்சிப் பாடகியும் இசை ஆசிரியருமான , எழுத்தாழர் நிலவன் அவர்கள் அன்புடன் சித்தி என்று அழைத்திடும் திருமதி மணிமொழி கிருபாகரன் அவர்கள் ஆற்றுகையில் , நூலாசிரியர் அறிவுச்சோலை வழர்த்தெடுத்த பிள்ளை என ஆரம்பித்த அவர் நிலவன் பற்றியும் அவன் எவ்வாறு அறிவுச்சோலைக்கு வந்தான் எனவும் எவ்வாறு அவன் பல்துறைசார் கலைஞனாக உருவாகியதையும் அவனது கல்வி, உயர்கல்வி, பட்டப்கல்வி, பட்டமேற் கல்வி, துறைசார் கல்வி, என அவனது ஆளுமைகள் பற்றிய பட்டியலில், ஊடகத்துறை தொழில் சார் பற்றியும் ஒரு போராளியாக அவனது செயற்பாடுகளையும் அவனது சமூக செயற்பாடுகள் பற்றியும் கூறிச்சென்றார்.
வலி சுமந்த மக்களோடு வாழந்து – உலகம் இதுவரை அறிந்திராத வலிகளை பதிவு செய்த கமராக்களி ன ஒருவனாய் அனைவரினாலும் அறியப்பட்ட நிதர்சனத்தைச் சேர்ந்த திரு அன்பரசன் அவர்கள் தனது வெளியீட்டுரையில் உலக பயங்கரவாத அரசுகளுக்கு அடிபணியாமல் தமிழர் தேசத்தின் இறைமையைத் தக்க வைக்கவும், அடுத்த தலைமுறைக்கு தெளிவான வரலாற்றை விட்டுச் செல்லவும் தொடர்ந்து தடுப்புச் சமர்களை நடத்தி இறுதியாக நந்திக்கடல் – முள்ளிவாய்க்கால் மண்ணில் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டது ஆனாலும், அவர்களின் ஈகம் உருவாக்கிய ஓர்மம் தமிழர் வரலாற்றில் அபூர்வமானது, உன்னதமானது, அது ஒரு நாள் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்து சுதந்திர தமிழீழத்தை பிரசவிக்கும், எதிர் காலத்தில் தமிழர் வீர மரபில் மட்டுமல்ல உலகப் படைத்துறை வரலாற்றில் தமிழ் இறைமைக்காக இறுதிவரை மண்டியிடாது போரிட்ட மாவீரர்கள், உலக வரலாற்றில் ஒரு உன்னத இடத்தைப் பெறுவார்கள். இது உருவாக்கிய ஓர்மம்தான் எமது விடுதலைக்கான அடிப்படை ,அடித்தளம். தமிழர் இறைமையைக் காக்கத் தம் இன்னுயிரை ஈர்ந்த வேங்கைகளுக்கு வீர வணக்கம், நாம் வெல்வது உறுதி. தர்மத்தின் அடிப்படையில் பயணித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சியோடு புதிய பரிணாமத்தில் புதுவீச்சோடு பயணிக்க தோள்கொடுப்போம் என உறுதி கொண்டு நிதர்சனம் நிறுவனத்தின் செயற்பாடுகள் 2009 முன்னரும் – பின்னர், தற்போது என ஆவணப்படுத்தல் மற்றும் அதன் செயற்பாடுகளைப்பற்றியும் , ஏன் இந்த நூலை நிதர்சனம் வெளியிடுகிறது எனவும், இந் நூலுக்கும், நூலாசிரியருக்கும், நிதர்சன நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பு பற்றியும் இந் நூலின் வருகையின் தேவை பற்றியும் தனது உரையில் கூறியிருந்தார்.
‘ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 – பாகம்- 01 ‘ கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வின் அரங்கில் மூத்த போராளியும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளருமான திரு.குணம் அர்களும், தற்போதைய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் திரு. ரகுபதி அர்களும், அரசியல்துறைப் போராளி திரு. தயாமோகன் அர்களும், போராளிகள் கட்டமைப்பைச் சேர்ந்த திரு. திலகன் அர்களும் , அக்கினிப் பறவைகள் இளையோர் அமைப்பு சார்பாக திரு. யதுராம், மற்றும் தமிழர் போராட்டத்தின் வீர வரலாறு படைத்த ஆனந்தபுரச் சமர்களத்தில் வீரச்சாவடைந்த சேரா என்று அனைவராலும் அழைக்கப்படும் நிதர்சனத்தின் பொறுப்பாளருமான கேணல் சேரலாதன் அவர்களின் துணைவியார் அமலா சேரலாதன் அர்களும் இணைந்து வெளியீட்டார்கள். நூல் வெளியீட்டின் முதல் பிரதியை மூத்த போராளியும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளர் திரு.குணம் அவர்கள் வழங்கி வைத்திட சுவிஸ் சைவ நெறிக்கூட இணைப்பாளர், திரு. சிவருசி சசிக்குமார் ஐயா அவர்கள் முதல் பிரதியினை பெற்றுக்கொண்டார். பின்னர் அரங்கில் வெளியீடு செய்தவர்களுக்கு கௌரவ பிரதிககளும் வழங்கப்பட்டது.
சிறப்புப் பிரதி வழங்கழல் நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் திரு. ரகுபதி அவர்கள் வழங்கி வைத்திட நெசத்தல் மாநில தமிழ்ப் பெண்களுடன் கரம் கொடுத்தல் அமைப்பின் சார்பாக திருமதி தேவகி அன்பரசன் நெசத்தல் மாநில இளையோர் அமைப்பின் சார்பாக திருமதி ஜிவா. சிமாறி விதுரன் லகீந்திரன் அசிவா திரு. நிவேதி குடணன் உட்பட இன்னும் பலர் பொற்றுக் கொண்டார்கள்
அரங்கில் நூலின் மதிப்பீட்டுரையில் நூல் பற்றியும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் பற்றியும், தற்போதைய அரசியல் நிலை, புதிய அரசியல் நகர்வுகள் பற்றியும், நிதர்சன நிறுவனத்தின் தேவையினையும், நிறுவனம் செய்ய வேண்டிய செயற்திட்டங்கள், நூலாசியர் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டிய விடையங்கள் பற்றி மிக ஆளமான மதிப்பீட்டு உரையினை , ஊடகவியலாளரும் கவிஞரும், அரசியல் ஆய்வாளரும் , பத்தி எழுத்தாளருமான திரு கனகரவி அவர்கள் வழங்கியிருந்தார்.
உலகம் எந்த ஆயுதங்களை எல்லாம் தடைசெய்து வைத்திருந்ததோ, அதை எல்லாம் பயன்படுத்தி தமிழர்களை அழித்தார்கள், இரசாயனக் குண்டுகளை வீசினார்கள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசினார்கள், செத்து விழுந்தவரின் உடல்கள் அனைத்தும் கருகின, கொத்துக் குண்டுகளை கொத்து கொத்தாக வீசினார்கள், போர்க் காலங்களில் மருத்துவமனைகள், மத வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக் கூடங்களில் தக்குதல்கள், நடத்தக்கூடாது. ஆனால், அதன் மீது இலக்குவைத்து தக்குதல்களை நடத்தனார்கள். போர்க்காலங்களில் ‘பாதுகாப்பு வலையங்ளை உருவாக்கி, பாதுகாப்பு வலையங்களின் மீதே தக்குதல்களை நடத்தி எம் இனம் நாளாந்தம் அழிக்கப்பட்ட நினைவு சுமந்த பாடலுடன் இணைந்து கொண்டர் தழிழீழ எழுச்சிப் பாடகர் திரு சந்திரமோகன் அவர்கள்.
கஞ்சி வழங்கல் – ஈழம் ஒரு செழிப்பான பூமி, வளங்கள் பல நிறைந்த தேசம் தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பி அதனை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லக் கூடிய நீர் வளத்தையும், நில வளத்தையும், மனித தொழிலாக்க வளத்தையும் கொண்டது. இயற்கையின் கொடையாக எமக்கு வழங்கப்பட்ட இந்த வளங்களை நாம் இனம் கண்டு அவற்றை உச்சப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்ற தேசியத் தலைவரின் சிந்தனையின் வடிவமாய் தமிழீழத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தி மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் பொருத்தமான துறை, திறன்சார் திட்டமிடுதலின் அடிப்படையில் உரிய இயற்கை வளங்களைக் கொண்டு உள் நாட்டு உற்பத்தியைப் பெருக்கவும் வேளாண்மையும், மீன்பிடி, கைத்தொழில் பொருண்மிய கட்டுமானத்திற்கு அடித்தளமானது. என்பதால் இவற்றை வளர்த்தெடுக்க தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் நிறுவனம் தொடங்கப்பட்டு பொருளாதாரத்தில் தன்னிறைவானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற முனைப்புடனே இயங்கியது.
தமிழீழத் தனியரசுக்கு உட்பட்ட நகரங்களில் பல வணிக நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 2006 பொருளாதரத் தடைகளையும் மீறி 3 வருட காலம் தமிழீழ நிழல் அரசின் எல்லைக்குள் வாழ்ந்த மக்கள் பட்டினி இன்றி வாழ்ந்திட உலர் உணவுப் பொருட்கள் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்தது.
தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட போரின் இறுதி நாட்களின் ஏவப்பட்ட எறிகணைகள் – கொத்துக்குண்டுகள் கொத்துக்கொத்தாய் வீழ்ந்து வெடித்திட கொதிக்கும் குருதியில் உடல் சிதறிய பிணங்களும், விழுப்புண்ணடைந்த மரணமும், பசியும் சூழ்ந்திருந்தது. உண்ண உணவின்றி தவித்த மக்களுக்கு போராளிகளும் தொண்டு நிறுவனங்களும் வன்னி பெருநிலப்பரப்பில் பட்டினிச் சாவுகளை கட்டுப்படுத்தி உயிர் பிழைத்திட வைத்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வாழ்வை மீள்நினைவுபடுத்தும். இன அழிப்பின் உச்சம் நிகழ்ந்து 13 ஆண்டுகள் உருண்டோடிப் போனாலும் இன அழிப்பு யுத்தம் தந்த வடுக்களை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது.
முள்ளிவாய்க்கால் உப்பு கஞ்சி…!! பல இலட்சம் மக்கள் கஞ்சிக்காகக் காத்திருந்து தமது பசிப்பிணி போக்கிய வரலாறுகளும் உண்டு. இக் கஞ்சி உணவு அன்றைய நாட்களில் எமது மக்களின் வாழ்வோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்ததாகவே காணப்பட்டது.
கஞ்சியை உண்ணும்போது எமது தேசத்தின் வரலாற்றை எம் பிள்ளைகளுக்கு விளக்கி, நினைவுகளை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வோம். ஆலயங்களிலும், பொதுஇடங்களிலும் கஞ்சிக்கொட்டில் அமைத்து, முள்ளிவாய்க்கால் கஞ்சியை முடிந்தவரை அனைவருக்கும் வழங்கி, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வோம். சிங்கள பேரினவாத அரசு இனவழிப்புக்கு ஆயுதமாக பயன்படுத்திய உணவையே நாம் எம் நினைவேந்தலின் வடிவமாக்குவோம்.
மே 18ம் நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகப் பரப்பெங்கும் உங்களுக்கு அருகில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, அஞ்சலி செலுத்திவது மட்டுமல்லாமல் ‘கஞ்சி’ எல்லோர் வீடுகளிலும் காய்ச்சிப் பருகுவதன் மூலம் அந்த வலிநிறைந்த நாட்களின் நினைவுகளை, மீள் நினைவுகளை நினைவூட்டி அடுத்த சந்ததியும் இந்த அழியாத நினைவுகளை மறவாதிருக்க, நீதிகேட்டுப் போராடும் எம்மக்களின் அவலக்குரல்களை இந்த உலகம் செவிமடுக்கும் நாள்வரை மட்டுமன்றி தமிழர்களின் வரலாற்று ஆயுதமாக ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ பெருவலியாகவும், அடையாளமாகவும் உணர்த்தப்பட வேண்டியது எமது வரலாற்றுக்கடமையாகும். உணர்வுபூர்வமான இப்பெரும் மக்கள் எழுச்சியின் போராட்ட வழிமுறைகளில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’யும் வரலாற்றில் என்றும் நிலைத்தே நிற்கும் என இன்றைய நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பற்றி பறைசாற்றும் முகமாக கஞ்சி வழங்கப்பட்டது.
‘ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 – பாகம்- 01 நூலின் பதிவுகள் ஒவ்வொரு தமிழனின் இதயத்தை தொட்டு உணர்வை வரவைப்பவை. இப்படைப்புகள் காலங்கடந்து தனது வாய்மையை உரைக்கும். அந்த வகையில் இப்படைப்பு பற்றிய எற்புரையினை நிஜத்தடன் நிலவன் அவர்களின் நண்பரும் ஊடகவியலாருமான திரு இளங்கிரன் கூறுகைளில் உயிர்ப்பூ தயாரிப்பு நிறுவனத்தின் தொற்றம், அதன் செயற்பாடுகள், மற்றும் ஆவணங்கள், நிழல்படங்கள் பற்றியும், தமிழ்த்தேசியம், மற்றும் விடுதலைப் புலிகள்பற்றி ஊடகங்களின் போக்கு, சழுக ஊடகங்களில் புலிநீக்கம் தொடர்பாகவும், ஓரு தேசிய ஊடகத்தின் தேவைபற்றியும் எதிர்காலத்தில் வெளிவரும் படைப்புக்களில் கவனம் செலுத்தும் விடயங்கள் பற்றி உரையாற்றி இருந்தார் .
நிகழ்வின் நிறைவுக்கு முன்னர் எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். என்ற தேசியத் தலைவர் அர்களின் சிந்தனையுடன் கடற்புலிகளைச் சேர்ந்த போராளி திருமதி. எழிலினி அவர்கள் நிதர்சனம் நிறுவனத்தின் சார்பாக நன்றியுரையினை வழங்ஙியிலுந்தார்.
கேணல் சேரலாதன் அவர்களின் துணைவியார் திருமதி அமலா சேரலாதன் அவர்களினால் பேச்சாளர்களுக்கான மதிப்பளித்தல் இடம்பெற்றது. நிறைவாக – எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப்படுத்தியுள்ளது. நீதியையும், தர்மத்தையும் சுதந்திரத்தையும் இலட்சியமாகக் கருதிய எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும். ஓரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போரட்டமாக் தேசியப் போரட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகும் என்ற தேசியத் தலைவர் அர்களின் சிந்தனையுடன் இன்றைய நிகழ்வு நிறைக்கு வந்திட ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’ என எழுச்சிகோசாம் எழுப்பி நிகழ்வை நிறைவுசெய்தார்கள்.