சோரம்போன யாழ் பல்கலை நிர்வாகம்

கற்றல் தவிர்த்து மாணவர்கள் மனதில் விரக்தியை உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறது யாழ் பல்கலைக்கழக நிர்வாகம்
நீண்ட பெரும் காலமாக தொடர்ச்சியான அடக்குமுறைக்கு உட்பட்டுவந்த இனம் ஆதலால் தொடர்ந்தும் அடக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்
போராட்டமும் இலட்சிய வேட்கையும் அடக்கப்பட்ட பின்னர் யாழ் பல்கலைக் கழக கலைப்பீட ஒன்றியம் மட்டுமே
தமிழின உரிமைக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறது. இதையும் அடக்கிவிட வேண்டுமென்பதன் தீராத முயற்சிதான் தொடற்சியாக கலைப்பீட மாணவர்களுக்கான கல்வித்தடை அறிவிப்புகளும் , ஒழுக்க நடவடிக்கை எனும் பெயரில் பல்கலை மாணவர்களை ஆரம்பநிலை மாணவர்கள் போல வழிநடத்தும் சட்ட திட்டங்களின் உருவாக்கமுமாகும்.
சோரம்போன நிர்வாக பீடம் தற்பொழுது என் 13 நண்பர்களின் உயிரை கேட்டிருக்கிறது . வடக்கில் தாம் நல்ல பெயர் எடுப்பதற்காகவும் மேலதிக பதவி ஆசைகளுக்காகவும், மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகிற இவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்களே
மாணவர்கள் செய்யாத நிரூபிக்கப்படாத குற்றங்களுக்காக மாணவர் ஒன்றியத்தை கலைத்தமையும் 13 மாணவர்களுக்கு கல்வித்தடை விதித்தமையும் கண்டிக்கத்தக்கது
இன்றளவும் 3 நண்பர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 2 வது நாளை தொட்டிருக்கும் உண்ணாவிரதத்தை உரிய தீர்வுமூலம் நிர்வாகம் நிறுத்தாவிடின் ஒட்டுமொத்த தமிழருக்கும் பதில் சொல்லியாகவேண்டும்.
மாணவர்களின் கோரிக்கைகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
























































