இவர் கைகளில் விலங்கு
இவர் முகம் நிலத்தில்
இவர் கழுத்தில் கால்கள்
இவர் “ஐயா”என்கிறார்
நால்வர் கண்களில்
கொலைவெறி துவேசம்
இவர் தண்ணீர் கேட்டார்
இவர் கருணை கேட்டார்
இவர் உயிர் பிச்சை
கேட்டார்நால்வர் கண்களில்
கொலைவெறி துவேசம்
இவர் மூக்கில் இரத்தம்
இவர் தசைகளில் நடுக்கம்
இவர் உறுப்புகள் பலமிழக்க
இவர் அழுதார்…“
மூச்செடுக்க முடியவில்லை”
நால்வர் கண்களில்
கொலைவெறி துவேசம்
இவர் மீண்டும் மீண்டும்
பன்னிரண்டு தடவைகள்
“மூச்செடுக்க முடியவில்லை”என்கிறார்
நால்வர் கண்களில்
கொலைவெறி துவேசம்
இவர் உடல் துவண்டது
“மூச்சைபார்“
ஒரு அன்புள்ளம் கெஞ்சியது
மருத்துவர் கெஞ்சினார்கள்
நால்வர் கண்களில்
கொலைவெறி துவேசம்
சுவாசம் அற்றுஉறுப்புகள் கதற
உயிர் பிரியஉடல் துவண்டது
நால்வர் கண்களில்
கொலைவெறி துவேசம்
இவர் அம்மா என்றழுதார்
உயிர் கொடுத்த தாயை தேடி
ஜோர்ஜ் ஃபுளோயிட் உயிர் பிரிந்தது
நால்வர் கண்களில்
கொலைவெறி துவேசம்
அந்த எட்டு நிமிடங்கள்
கொலைவெறி துவேசம்
இவர் கறுப்பர் ஆனதினால்
இப்படி…
நால்வரை காக்க
இரட்டை நீதியிலிருந்து
விளக்கங்கள் வரும்.
அமைதி கொள்ளுங்கள்
ஜோர்ஜ்….
ஆங்கிலத்தில் – S.Hashan’s Poems & Messages
தமிழில் – ந.மாலதி




















































