வடமாகாண வடமாகாணத்திற்கான தபால் சேவைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே வழங்கி வருகின்றோம். வடமாகாண தபால் அத்தியட்சகர் எஸ்.என்.ஜி.ஏ.சுவர்ணசிங்க. அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய சுகாதார அமைச்சின் அறிவுத்தலிற்கு அமையவே நாம் மக்கள் சேவையினை புரிந்து வருகின்றோம். குறைந்தளவு அலுவலர்களுடன் குறித்த பணியை செய்து வருகின்றோம்.
என வடமாகாண தபால் அத்தியட்சகர் எஸ்.என்.ஜி.ஏ. சுவர்ணசிங்க.தெரிவித்தார். தபால் விநியோகம் குறித்து ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கணடவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் இப்போது வடமாகாணத்திற்கான விநியோகம் மட்டுமே இடம்பெறுகின்றது. அத்துடன் தினமும் காலை 8.30 தொடக்கம் மதியம் 12.30வரையான மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் சேவையினை வழங்கி வருகின்றோம்.யாழில் எந்த வெளிநாட்டுப் பொதிகளும் தேக்க நிலையில் இல்லை. உள்ளூரில் இருந்து வெளிநாட்டிற்கான சேவையினையும் நாம் இன்னும் ஆரம்பிக்கவில்லை.
மிக விரைவில் ஏனைய சேவைகள் குறித்து தெரியவரும் என்றார். மேலும் மட்டுப்படுத்தப்பட்ட சேவை மதியம் 12.30உடன் நிறைவு பெறுவதனால் அதன் பின்னான நேரமும் பலர் தபாலகம் சென்று திரும்புவதனைக் காணாமுடிகின்றது. தபாலகத்தில் குறித்த நேரம் தொடர்பில் விளம்பரப்பலகையில் குறிப்பிட்டிருப்பின் நாம் திரும்பிச் செல்லவேண்டியதில்லை என சலர் கருத்துத் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்.தர்மினி.




















































